More
Categories: Cinema History Cinema News latest news

கூண்டுக்கிளி படப்பிடிப்பில் அடிக்கடி எஸ்கேப் ஆன சிவாஜி… கடுப்பாகி கேட்ட எம்.ஜி.ஆர்…

நடிகர் சிவாஜி மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படப்பிடிப்பில் இருந்து அவர் அடிக்கடி வெளியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சிவாஜி, பராசக்தி படம் மூலம் மிகப்பெரிய திரை வெளிச்சம் பெற்றிருந்த நேரம் அது. அதன்பிறகு மிகக் கவனமாகத் திரைப்படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த காலகட்டத்தில்தான் எம்.ஜி.ஆரும் முன்னணி நடிகராக வளர்ந்து வந்தார்.

Advertising
Advertising

எம்.ஜி.ஆர் – சிவாஜி என்கிற இரண்டு இளம் முன்னணி கதாநாயகர்களை வைத்து எழுத்தாளர் விந்தன் எழுதியிருந்த கூண்டுக்கிளி கதையை படமாக்க முடிவெடுக்கப்பட்டது. முதலில் எம்.ஜி.ஆரினை அணுக முடிவு செய்தார்கள். ஆனால், எம்.ஜி.ஆரோ`யோசிக்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்’ எனக் கூறிவிட்டார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் நான் உங்கள் படத்தில் நடிப்பதாக அலுவலத்திற்கே நேரில் வந்து கூறினார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் – சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் – எப்படி உருவானது தெரியுமா?

படத்திற்கு எம்.ஜி.ஆர் ஒரு ரூபாய் மட்டும் முன்பணமாகக் கொடுங்கள் என்று தேதிகளை இறுதி செய்துவிட்டுச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். இதை தொடர்ந்தே, சிவாஜியும் அவர் அலுவலத்திற்கு திடீர் எண்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல், எல்லா விஷயமும் தெரிந்து தான் வந்தேன். உங்கள் படம் நடிக்க எனக்கு சம்மதம் என்றாராம். வெள்ளிக்காசுகளை மட்டும் முன்பணமாக வாங்கி கொண்டாராம்.

கூண்டுக் கிளி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. எம்.ஜி.ஆர் அவர் காட்சியில் நடித்துக்கொண்டிருந்த போது அங்கிருந்து கிளம்பிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் சிவாஜி. ஆனால் இது சிவாஜியின் வழக்கமில்லை. பொதுவாக படப்பிடிப்பு சமயத்தில் அங்கிருந்து வெளியேறவே மாட்டார். இது அறிந்த படக்குழு ஏன் இவர் இப்படி செய்கிறார் என அதிர்ந்தனர். இந்த செய்தி எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு எட்டி இருக்கிறது. ஏன் இப்படி செய்கிறார் என எம்.ஜி.ஆரே சற்று சுணங்கினாராம்.

அதைப் பற்றி சிவாஜியிடமே ஒரு நாள் நேரடியாகக் கேட்டார் ராமண்ணா. இதற்கு பதிலளித்த சிவாஜி, எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது உங்களுக்குத் தெரியும் தானே. அண்ணன் எதிரிலே நான் எப்படி சிகரெட் பிடிக்க முடியும்? அதனால்தான் படப்பிடிப்பு இடைவேளைகளில் வெளியே சென்று விடுகிறேன் என்றாராம். இதை அறிந்த எம்.ஜி.ஆர்

Published by
Akhilan