Cinema News
அந்த விஷயத்துல எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வேற வேற!.. சீக்ரெட் சொல்லும் நாகேஷ்…
60களில் முன்னணி காமெடி நடிகராக கலக்கியவர் நாகேஷ். அப்போது சந்திரபாபு, தங்கவேல் என பலரும் இருந்தாலும் நாகேஷ் அதிக படங்களில் நடித்த ஒரு நடிகராகவே இருந்தார். ஒல்லியான தேகம், அம்மை நோயால் மாறிய முகம் என இருந்தாலும் தனது உடல்மொழியால் ரசிகர்களை ரசிக்க வைத்தார்.
நாகேஷை போல டைமிங் காமெடி செய்யும் நடிகரை பார்க்கவே முடியாது. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. எல்லா நடிகர்களுடன் நாகேஷ் நடித்தாலும் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் ஆகியோரின் படங்களில் அதிகம் நடித்த நடிகர் நாகேஷ்.
இதையும் படிங்க: நான் செய்தால் நஷ்டம்.. நீங்கள் மட்டும் செய்யலாமா?!. எம்.ஜி.ஆரை கேள்வியால் மடக்கிய நாகேஷ்!…
ஒரு நாளில் ஒரு படத்திற்கு 2 மணி நேர கால்ஷீட் என 5 படங்களில் எல்லாம் நடிப்பார் நாகேஷ். எனவே, நாகேஷுக்காக எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களே ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்திருப்பார்கள். எம்.ஜி.ஆர் கூட நாகேஷ் வந்து நடித்து கொடுப்பதற்காக பல நாட்கள் எல்லாம் காத்திருந்த கதையெல்லாம் நடந்திருக்கிறது. பல நாட்கள் படப்பிடிப்புக்கு தாமதமாகவே போவார் நாகேஷ். ஆனாலும் தான் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து கொடுத்துவிடுவார்.
ஒருமுறை நாகேஷிடம் ‘நீங்கள் படப்பிடிப்புக்கு தாமதமாக போகும்போது எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் எப்படி நடந்து கொள்வார்கள்?’ என கேட்டபோது அதற்கு பதில் சொன்ன நாகேஷ் ‘இதில் சிவாஜியை சமாளிப்பதுதான் கஷ்டம். ஏனெனில் 7 மணிக்கு படப்பிடிப்பு துவங்கினால் 6.30 மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருக்கும் நடிகர் அவர்.
இதையும் படிங்க: ஆச்சி மனோரமாவை நம்ப வைத்து ஏமாற்றினாரா நாகேஷ்!.. வெளியே வந்த ரகசியம்!..
நான் தாமதமாக போனால் என்னிடம் எந்த கோபத்தையும் காட்டமாட்டார். மனதிலேயே வைத்துக்கொள்வார். உணவு இடைவேளையின்போது ஜாடை மாடையாக என்னை திட்டுவார். ஆனால், எம்.ஜி.ஆர் அப்படி அல்ல. அடிப்படையில் அவர் ஒரு இயக்குனரும் கூட. எனவே, புரிந்துகொள்வார்.
நான் பல படங்களில் நடித்துவிட்டு தாமதமாக வருவேன் என அவருக்கு தெரியும். எனவே, நான் வரும்வரை நான் இல்லாத காட்சிகள் எடுக்க சொல்வார். சில சமயம் கோபப்பட்டாலும் மிகவும் தன்மையாக என்னிடம் பேசி வேலை வாங்கிடுவார்’ என நாகேஷ் சொல்லி இருக்கிறார்.