Cinema News
புரட்சித்தலைவர் – புரட்சிக்கலைஞர் இறப்பில் இருக்கும் ஒற்றுமை! கருப்பு எம்ஜிஆராகவே வாழ்ந்து மறைந்த கேப்டன்
Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்று விளங்கினார். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து அதன் பின் ஹீரோவாக உயர்ந்தவர்.
இன்று அவர் நம்மிடையே இல்லை எனும் போத் யாராலும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழக மக்களை இன்று மீளாத்துயரில் விட்டு சென்றார். கடந்த சில வருடங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்துக்கு ஏராளமான சிகிச்சைகளை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: அண்ணே என்னை மன்னிச்சிடுங்கண்ணே!.. கதறி அழுது வீடியோ போட்ட விஷால்….
ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் நம்மை விட்டுச் சென்றார். அவர் இறந்த நாளான இன்று டிசம்பர் 28, மார்கழி 12, வியாழக்கிழமை. இதே மாதத்தில்தான் நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் நம்மைவிட்டு சென்றார்.
எம்ஜிஆர் இறந்தது டிசம்பர் 24, மார்கழி 9 , வியாழக்கிழமை. பொதுவாக மார்கழி மாதத்தில் இறக்கிறவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என்பது இந்துமதத்தில் இருக்கும் ஒரு ஐதீகம். அதுமட்டுமில்லாமல் எம்ஜிஆர் மீது அதிக பற்றுக் கொண்டவர் விஜயகாந்த். அவருடைய தீவிர ரசிகரும் கூட.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் விஜயகாந்த் செய்த அந்த விஷயம்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்.. இப்படி ஒரு மனுஷனா!..
எம்ஜிஆர் நினைவு நாளின் போது ராமாவரம் தோட்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்த் உதவிகளை செய்து வருவது வழக்கமாம். மேலும் மக்கள் விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்றுதான் அழைத்தார்கள்.
இப்படி எம்ஜிஆரை மனதார நேசித்த விஜயகாந்த் இப்போது எம்ஜிஆர் இறந்த அதே மாதம், அதே நாளில் இறந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: நீ பொட்டு வச்ச தங்க குடம்.. ஊருக்கு நீ மகுடம்.. விஜயகாந்த் செய்த சரித்திர சாதனை!