முதல் சந்திப்பிலேயே கேப்டனை ஆச்சர்யப்படுத்திய எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!..

மதுரையில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த விஜய ராஜுக்கு சினிமா என்றால் கொள்ளை பிரியம். அதுவும் எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் ரிலீஸ் அன்றே தியேட்டருக்கு போய்விடுவார். அதற்கு காரணம் எம்.ஜி.ஆர் படங்களில் இருக்கும் சண்டை காட்சிகள்தான். எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தை மட்டும் தியேட்டரில் 70 முறை பார்த்திருக்கிறார் விஜயராஜ்.
அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் சிலாகித்து தனது நண்பர்களுடன் பேசுவாராம். ஒருகட்டத்தில் ‘நாமும் நடிகன் ஆனால் என்ன?’ என்கிற ஆசை அவருக்குள் தோன்றியது. எனவே, நண்பருடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். பல அவமானங்களை சந்தித்து பின்னரே வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: கேப்டன் வீட்டில் அமீர்!. கோபத்தில் காபி-யை திருப்பி அனுப்பிய விஜயகாந்த்!.. நடந்தது இதுதான்!….
விஜயராஜ் என்கிற தனது பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். எம்.ஜி.ஆரை போலவே ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். திரைப்படங்களில் தப்பு நடந்தால் எம்.ஜி.ஆர் வந்து தட்டி கேட்பார். அதே ரூட்டில் பயணித்தார் விஜயகாந்த். விஜயகாந்தின் உடன் இருந்தவர்கள் அவரை எம்.ஜி.ஆர் போலவே புரமோட் செய்தார்கள்.
ஆனால், சத்தியாஜை போல, பாக்கியராஜை போல எம்.ஜி.ஆரிடம் விஜயகாந்த் நெருக்கமாக பழகவில்லை. என்ன காரணமோ!.. எம்.ஜி.ஆரை சந்தித்து தனது அபிமானம் பற்றி பேச வேண்டும் என்று கூட விஜயகாந்துக்கு தோணவில்லை. அவரை சந்திப்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தார்.
இதையும் படிங்க: முதல்ல தமிழ் கத்துக்கிட்டு வந்து என்கிட்ட பேசு!.. பிரபல நடிகையை விரட்டிய விஜயகாந்த்…
எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகிய மற்றொரு நடிகர் ராஜேஷ். அவரின் குடும்ப திருமண விழாவுக்கு விஜயகாந்த் சென்றிருந்தபோது அங்கு எம்.ஜி.ஆரும் வந்திருந்தார். அப்போது விஜயகாந்தை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைத்தார் ராஜேஷ். அப்போது பல நாட்கள் பழகியது போல அவரை புன்சிரிப்புடன் வரவேற்று எம்.ஜி.ஆர் அருகில் அமர வைத்து பேசி இருக்கிறார்.
அந்த சந்திப்பை மறக்கவே முடியாது என விஜயகாந்தும் சொல்லி இருக்கிறார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய தேர்தல் பிரச்சார வேனை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி விஜயகாந்துக்கு கொடுத்தார். அந்த வேனில்தான் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.