நடிகை சொன்ன வார்த்தை!..முதலமைச்சர் ஆனேன்!..பல பேர் முன்னிலையில் எம்ஜிஆர் பெருமிதம்!..யார் அந்த நடிகை?..
எம்ஜிஆரின் நடிப்பில் இயக்கத்தில் கண்ணதாசன் கதையில் உருவான படம் தான் நாடோடி மன்னன் திரைப்படம். இந்த படம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். படம் எடுத்து முடிக்கிற வரைக்கும் எம்ஜிஆர் ஏகப்பட்ட சிரமங்களுக்கு ஆளானார் என்பது ஓரளவு தெரிந்த ஒன்று.
இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார் எம்ஜிஆர். ஒன்று மன்னனாகவும் மற்றொன்று நாடோடியாகவும் நடித்திருப்பார். எம்.எஸ்.வி இசையில் படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆனது. இந்த படத்தில் ஒரு சீனில் மன்னன் வேடத்தில் நாடோடியாக இருக்கும் எம்ஜிஆரை நடிக்க வைத்திருப்பர்.
இதையும் படிங்க : “கமல் சாகுறத என்னால பாக்க முடியல”… தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுத மனோரமா…
அப்போது மன்னன் எம்ஜிஆருக்கு மனைவியாக எம்.என்.ராஜம் நடித்திருப்பார். தன் கணவனை நீண்ட நாள்களுக்கு பிறகு பார்ப்பதால் மன்னன் வேடத்தில் இருக்கும் நாடோடி எம்ஜிஆரிடம் நெருங்க நினைப்பார் எம்.என்.ராஜம். அதற்குள் எம்ஜிஆர் ‘சகோதரி! நான் மன்னன் இல்லை, நாடோடி’ என்று கூறுவார்.
இதையும் படிங்க : டைட் பனியனில் திமிறும் அழகு!..செல்பியில் உசுர வாங்கும் ரித்திகா சிங்….
இதை புரிந்து கொண்ட எம்.என்.ராஜம் எம்ஜிஆரை நம்புவார். உடனே ஒரு வசனம் வரும். ‘உண்மையிலேயே நம்புகிறாயா சகோதரி’ என எம்ஜிஆர் கேட்க எம்.என்.ராஜம் ‘ நம்புகிறேன் அண்ணா, நான் மட்டும் என்ன? இனி இந்த நாடே நம்பித்தான் ஆக வேண்டும்’ என கூறுவார். இந்த படம் முடிந்த கையோடு தான் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். அப்போது அவரை பார்ப்பதற்காக எம்.என்.ராஜம் அவரது குடும்பத்தோடு எம்ஜிஆரை பார்க்க சென்ற போது ராஜத்தை பார்த்ததும் அங்கு இருந்தவர்களிடம் எம்ஜிஆர் ‘இவர் அன்னைக்கு சொன்ன வார்த்தை தான் இன்று பலித்திருக்கிறது, நான் இன்று இந்த பதவியில் இருக்கிறேன்’ என்று நாடோடி மன்னன் பட வசனத்தை குறிப்பிட்டு சொன்னாராம் எம்ஜிஆர். இதை எம்.என்.ராஜம் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.