Cinema History
வாலியின் பாடல் பிடிக்காமல் கண்ணதாசனிடம் போன எம்.ஜி.ஆர்!… அட அந்த பாட்டா?!..
MGR Kannadasan: எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் பிராதானமாக இருப்பதே பாடல்கள்தான். எம்.ஜி.ஆர் படத்தில் கண்டிப்பாக நல்ல கருத்துக்களை கொண்ட ஒரு தத்துவ பாடல், ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் சொல்லும் ஒரு அறிவுரை பாடல், தேன் சொட்டும் காதல் படம் என எல்லாமும் இருக்கும். எம்.ஜி.ஆர் படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காவும் பாடல்களுக்காகவுமே ரசிகர்கள் தியேட்டருக்கு போவார்கள்.
அதனால், பாடல் காட்சிகளுக்கு எம்.ஜி.ஆர் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இசையமைப்பாளரை பெண்டு கழட்டி மெட்டுக்களை வாங்குவார். பல மெட்டுக்களை போட சொல்லை ஒன்றை தேர்ந்தெடுப்பார். அதன்பின் திறமையான பாடலாசிரியரை வைத்து அந்த மெட்டுக்களுக்கு பாடல் எழுத சொல்லுவார்.
இதையும் படிங்க: அந்த ஹீரோவை வச்சி படம் எடுக்க கூடாது!.. தயாரிப்பாளருக்கு கண்டிஷன் போட்ட எம்.ஜி.ஆர்…
அதில் ஏதேனும் மாற்ற வேண்டும் என நினைத்தாலும் அதை பாடலாசிரியிடம் சொல்லி மாற்றிவிடுவார். திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு அதிக பாடல்கள் எழுதியது கண்ணதாசன் மற்றும் வாலி ஆகியோர்தான். துவக்கத்தில் எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசன் மட்டுமே பாடல்களை எழுதி வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆருடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது.
அதற்கு காரணம் இருவரின் அரசியல் பார்வைதான். கண்ணதாசன் காங்கிரஸை ஆதரித்து வந்தார். எம்.ஜி.ஆரோ திராவிட சித்தாந்தத்தின் மீது கொண்ட பற்றால் திமுகவை ஆதரித்து வந்தார். எனவே, அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதையும் படிங்க: ஆபிஸ் பாய் என அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர்… அதையும் தாண்டி சாதித்து காட்டிய எம்.எஸ்.வி…
எனவே, வாலியை வைத்து தனது படங்களில் பாடல்களை தொடர்ந்து எழுத வைத்தார் எம்.ஜி.ஆர். சில வருடங்கள் எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும் பேசிக்கொள்ளவே இல்லை. சின்னப்ப தேவரின் தயாரிப்பில் நடித்து வெளிவந்த திரைப்படம் முகராசி. இந்த படத்தில் ஒரு சூழலுக்கு வாலி எழுதிய பாடல் தேவருக்கு பிடிக்கவில்லை. எனவே, எம்.ஜி.ஆரிடம் சென்று இதை சொல்லி ‘கண்ணதாசனை எழுத வைக்கலாமா?’ என தயங்கியபடியே கேட்டார்.
எம்.ஜி.ஆரும் அதற்கு சம்மதம் சொல்ல கண்ணதாசன் எழுதிய பாடல்தான் ‘உண்டாக்கி விட்டர்கள் ரெண்டு பேரு.. இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு’ ஆகும். இந்த பாடல் எம்.ஜி.ஆருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படம் ஓடிய தியேட்டரை கொளுத்திய ரசிகர்கள்!… காரணம் என்ன தெரியுமா?…