தமிழ் திரையுலகின் பழம்பெரும் இசையமைப்பாளர்களில் மிகவும் பிரபலமடைந்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. இவர்கள் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவில் புதிய ஒரு அத்தியாயத்தை உருவாக்கினார்கள். அந்தாகாலத்தில் எந்தவொரு படம் எடுத்தாலும் அதில் இவர்கள் கூட்டணிதான் இசையமைக்கும்.
ஆரம்பகாலத்தில் தமிழ் சினிமாவில் இசையமைக்க தெலுங்கு இசையமைப்பாளர்களும் ஹிந்தி இசையமைப்பாளர்களும் வருவர். ஆனால் நமது தமிழ் மொழியில் இசையமைக்க எந்த ஒரு இசையமைப்பாளர்களும் இல்லை. அந்த நேரத்தில் கி.சுதர்சனம், எம்.எஸ்.ஞானமணி போன்ற பல இசையமைப்பாளர்கள் வந்தனர். இவர்கள் அனைவரும் நல்ல இசையமைப்பாளர்களாக இருந்தாலும் இவர்களின் பாடல்களில் தெலுங்கு, ஹிந்தி இசைகளின் தாக்கம் இருந்தது.
இதையும் வாசிங்க:ஒரே செகண்டில் உருவான பல்லவி… காலத்தால் அழியாத கண்ணதாசன் வரிகள்.. அட அந்த பாட்டா!…
அத்தகைய காலகட்டத்தில் வந்தவர்தான். சி.ஆர்.சுப்புராமன். இவர் தமிழ் சினிமாவிற்கு ஏற்றார்போல் இசையமைத்தார். இவருக்கு கீழ் இருந்து இசையை கற்றவர்கள்தான் எம்.எஸ்.வி மற்றும் ராமமூர்த்தி. ஒரு காலத்தில் சுப்புராமன் இறந்துவிட அவர் இசையமைக்க வேண்டிய படங்கள் நிறையவே இருந்தன. அப்போது எங்கள் குருவின் பாடல்களை நாங்களே முடித்து தருகிறோம் என எம்.எஸ்வியும் ராமமூர்த்தியும் பொறுப்பேற்று கொண்டனர்.
இதில் எம்.எஸ்.வி தமிழ்நாட்டில் பிறந்தவராக இருந்தாலும் பூர்வீகம் கேரளா. அதனால் கேரள இயக்குனரான ஈச்சப்பன் இயக்கிய தமிழ் படமான ஜெனோவா திரைப்படத்தில் இசையமைக்க அழைக்கப்பட்டார். மேலும் என்.எஸ்.கலைவாணர் இயக்கிய பணம் திரைப்படத்திலும் இசையமைத்து கொண்டிருந்தார்.
இதையும் வாசிங்க:சினிமாவிற்கு முழுக்கு போட்ட பத்மினி…. தனது பாடல் மூலம் பழி வாங்கிய கண்ணதாசன்…
கேரள இயக்குனரான ஈச்சப்பனின் படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்து கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரை பொறுத்தவரை எம்.எஸ்.வி சுப்பையா நாயுடுவிடம் அலுவலக உதவியாளராக இருந்தார் என்பது மட்டுமே தெரியும். அப்போது எம்.ஜி.ஆர் இயக்குனரிடம் இவர் என்ன இசையமைப்பாளர், ஆபிஸ் பாயை கொண்டு வந்து இசையமைக்க சொல்கிறீர்கள். படத்தை கெடுத்துவிடாதீர்கள் என கூறியுள்ளார்.
பின் இயக்குனர் எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை அவர்களின் பாடல்களை கேளுங்கள். அப்படியும் உங்களுக்கு பிடிக்கவில்லையானால் நாம் படத்திலிருந்து அதனை நீக்கிவிடலாம் என கூறுகிறார். எம்.ஜி.ஆரும் சரி சொல்ல இவர்களின் கூட்டணியின் ஒரு பாடலை உருவாக்கி அதனை எம்.ஜி.ஆரை கேட்க வைக்கின்றனர். பாடலை கேட்ட எம்.ஜிஆர் அவர்களின் பாடலில் மெய்மறந்து அப்பாடலை புகழ்ந்து பேசுகிறார். பின் இவ்வாறு ஆன எம்.ஜி.ஆர், எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி கூட்டணி கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக சென்றது.
இதையும் வாசிங்க:கடனில் சிக்கி வீடு ஜப்தி!.. கண்ணதாசன் எழுதிய அந்த பாட்டு!.. கவிஞருக்கு இவ்வளவு சோகமா!..
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…