Cinema History
5 ரூபாய் கடனை அடைக்க எம்.ஜி.ஆர் பட்ட பாடு!.. திருப்பி கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?!
Actor mgr: எம்.ஜி.ஆர் என்றால் நடிகர், சூப்பர்ஸ்டார், அரசியல்வாதி, முதலமைச்சர், எல்லோருக்கும் அள்ளிக்கொடுத்தவர், தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்தவர் என்று மட்டும்தான் பலரும் அறிவார்கள். ஆனால், அவர் தனது வாழ்வில் வறுமையின் உச்சத்தை பார்த்தவர். பசி, பட்டினியுடன் பல நாட்களை ஓட்டியவர் என்பது பலருக்கும் தெரியாது.
சினிமாவில் நுழைந்து 10 வருடங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில்தான் எம்.ஜி.ஆர் நடித்தார். ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கி அதன்பின் நடோடி மன்னன், அடிமை பெண், ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். அப்படியே அரசியல் கட்சியையும் துவங்கி தமிழகத்தின் முதல்வராகவும் மாறினார்.
இதையும் படிங்க: கார் டிரைவரை கதாசிரியர் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. பல ஹிட் படங்களில் கலக்கிய சம்பவம்!..
எம்.ஜி.ஆர் கொடுத்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால், கஷ்டப்படும் நேரத்தில் அவர் கடன்களும் வாங்கியிருக்கிறார். ஆனால், எல்லாவற்றையும் அவர் சரியாக திருப்பியும் கொடுத்திருக்கிறார். எம்.ஜி.ஆர் சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு, வறுமையில் இருந்த நேரம் அது. அப்போது அவருக்கு நாயர் என்கிற ஒரு நண்பர் இருந்தார். ஒரு ஜப்பானியர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை நாயர் ஐந்து ரூபாயை கொடுத்தார். எம்.ஜி.ஆர் அதை வாங்க மறுத்தார். அதற்கு நாயர் ‘ராமச்சந்திரா நீ கஷ்டத்தில் இருப்பது எனக்கு தெரியும். இதை கடனாக வைத்துக்கொள்’ என சொல்லவே எம்.ஜி.ஆரும் வாங்கி கொண்டார். சில வருடங்களில் எம்.ஜி.ஆர் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ஆரம்பிச்சி வச்சத நான் முடிச்சிருக்கேன்!.. போறபோக்குல அள்ளிவிடும் சிவகார்த்திகேயன்!..
நாயரிடம் அந்த ஐந்து ரூபாயை திருப்பி கொடுக்க எம்.ஜி.ஆர் நினைத்தார். ஆனால், அந்த ஜப்பானிய குடும்பத்துடன் நாயர் ஜப்பானுக்கே சென்றுவிட்டதாக தெரியவந்தது. உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக ஜப்பான் சென்றிருந்தபோது ஒரு சாலையோரத்தில் அந்த நாயர் டீ கடை வைத்திருந்ததை எம்.ஜி.ஆர் பார்த்துவிட்டார்.
உடனே வண்டியை நிறுத்தி அவரை கட்டித்தழுவிக்கொண்டார். மேலும், தான் வாங்கிய ஐந்து ரூபாய்க்கு பதில் 50 ஆயிரமாக திருப்பி கொடுத்தார். நாயர் முதலில் அதை வாங்க மறுத்தார். எம்.ஜி.ஆர் அவரை வற்புறுத்தி வாங்க வைத்தார். கடனை அடைத்ததாலும், நாயரை பல வருடங்கள் கழித்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் சந்தோஷம் தருணமாக அமைந்தது.
இதையும் படிங்க: 10 வயதிலேயே சொந்த வசனத்தை பேசிய எம்.ஜி.ஆர்!.. நாடகத்தில் மாஸ் காட்டிய பொன்மன செம்மல்…