ஒரு காலத்தில் சினிமாவையே தன்னுள் அடக்கிய நடிகை.. வீடு இல்லாமல் தவித்த சம்பவம்.. பதறிய எம்ஜிஆர்!..
சினிமாவில் மாபெரும் கொடை வள்ளலாகவே வாழ்ந்து வந்தார் எம்ஜிஆர். எத்தனை எத்தனையோ பேருக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்திருக்கிறார். தன்னிடம் ஒன்றும் இல்லாத நேரத்தில் கூட ரோட்டோரத்தில் இருக்கும் மனிதர்களுக்காக மிகுந்த அக்கறை கொண்டவராக விளங்கினார்.
ஒரு சமயம் நடிகை ஒருவர் வீடு இல்லாமல் தவிக்கிறார் என்றதும் மிகவும் பதறிப் போனாராம் எம்ஜிஆர். அவர் வேறு யாருமில்லை. பாடகியும் நடிகையுமான எம்.எஸ்.சுப்புலட்சுமி. இசையை தன் தாயின் மரபுகளில் இருந்து வந்ததால் மிகவும் எளிதாக கற்றுக் கொண்டார் சுப்புலட்சுமி.
பல இசைக் கச்சேரிகள் நடத்தியிருக்கிறார். நாடக மேடைகளிலும் பல பாடல்களை பாடியிருக்கிறார். இதனால் அடைந்த புகழால் தான் இவரை சினிமா வரைக்கும் கொண்டு சென்றது. சிறுவயதில் இருந்தே பாடி வந்த சுப்புலட்சுமிக்கு தாயைத் தவிர மதுரைசீனிவாச அய்யர், மாயவரம் வி.வி.கிருஷ்ணஅய்யர் மற்றும் புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாசய்யர்ஆகியோரும் எம்.எஸ்ஸுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்த குருக்கள்.
அவரின் புகழை அப்படியே சினிமாவிற்குள் கொண்டு வந்தவர் பழம்பெரும் இயக்குனரான கே.சுப்பிரமணியம். இவர் தான் சுப்புலட்சுமியை சினிமாவில் பல படங்களில் நடிக்க வைத்தார். அவர் நடித்த முதல் படம் ‘சேவாசதன்’. 4 படங்களில் நடித்துள்ள சுப்புலட்சுமி ‘மீரா’ படத்தின் மூலம் தான் புகழின் உச்சிக்கே சென்றார்.
அந்தப் படத்தில் ஏராளமான பாடல்கள் உள்ளன. அவை அனைத்தையும் சுப்புலட்சுமிதான் பாடியிருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற பாடல் இன்று வரை கேட்டாலும் மனதை கவரும் வகையில் அமைந்திருக்கும். இப்படி பட்ட சுப்புலட்சுமி ஒரு சமயம் வீடு இல்லாமல் தவித்தாராம்.
அதை அறிந்த எம்ஜிஆர் மிகவும் பதறியிருக்கிறார். ஏனெனில் சுப்புலட்சுமி மீது அலாதி பக்தி கொண்டவராக இருந்தாராம் எம்ஜிஆர். உடனே நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு ஏற்பாடு செய்து அதற்கான முழு செலவுகளையும் எம்ஜிஆரே ஏற்றுக் கொண்டாராம். இந்த தகவலை அரசியல் விமர்சகர் காந்தராஜ் கூறினார்.
இதையும் படிங்க : விஜயின் கணக்கே வேற!.. இந்த நேரத்துல கண்டிப்பா அரசியலுக்கு வந்துருவாரு!.. சொல்கிறார் மூத்த பத்திரிக்கையாளர்..