Cinema History
சினிமாவே வேண்டாம் என்ற கலைஞரை மல்லுக்கட்டி அழைத்த எம்ஜிஆர்… பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்குதா?
கலைஞர் கருணாநிதியின் வசனம் என்றாலே அந்தப் படம் பட்டையைக் கிளப்பும். வாள் வீச்சைக் காட்டிலும் கூர்மையாக இருக்கும் அவரது வசனம்.
அது ரசிகனுக்கு ஒரு உற்சாகத்தைத் தரும். சிவாஜியின் முதல் படம் பராசக்தி. அதற்கு வசனம் எழுதியவர் கலைஞர் தான். வசனத்தால் ஓடிய படம் என்றால் அது இதுதான். வசனத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்தில் சிவாஜியும் படத்தில் அபாரமாக நடித்து இருந்தார்.
கலைஞர் திரையுலகிற்கு ரொம்ப கசப்பான அனுபவம்னு வந்ததால அவரோட முதல் படத்திலேயே அவரது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அதனால் மீண்டும் சொந்த ஊருக்கேப் போயிடலாம்னு திரும்பினார்.
அப்போது எம்ஜிஆருக்கு 3வது படம். அது கதையில் ஏதோ பிரச்சனையாகி நின்று போனது. கதையை மறுபடியும் சரி செய்தால் தான் படத்தை எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது.
உடனே எம்ஜிஆர் எனக்குத் தெரிந்த ஒரு நபர் இருக்கிறார். அவர் சரி செய்து விடுவார் என்று கலைஞரைத் தேடி அவரது வீட்டுக்குப் போகிறார். அங்கு போய் கதை தேவைப்படுகிறது. வாங்க என அழைக்கிறார். அதைக் கேட்டதும் கலைஞர் கருணாநிதி, ராமச்சந்திரன் பழைய நட்பில் என்னைப் பார்க்க வந்திருக்கார் என நினைச்சேன்.
ஆனா அவரே சினிமாவுக்கு அழைப்பதால நீங்க சொல்லி அனுப்பிருங்கன்னு மனைவி மற்றும் தாயாரிடம் சொல்லி விடுகிறார். ஆனால் எம்ஜிஆரோ விடாப்பிடியாக அவரை சினிமாவுக்கு வரவழைத்து விடுகிறார். அந்தப் படம் தான் மருதநாட்டு இளவரசி.
அதன்பிறகு கலைஞர் சினிமா உலகில் உச்சத்தை எட்டினார் என்பது தெரிந்த விஷயம். இதுல இன்னொரு பெரிய விஷயம் என்னன்னா அந்தக் காலத்துலயே சம்பளத்தை எல்லாம் பேசி விட்டு சினிமாவிற்கு வந்தவர் கருணாநிதி தானாம். மேற்கண்ட தகவலை பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
1950ல் வெளியான படம் மருதநாட்டு இளவரசி. எ.காசிலிங்கம் இயக்கிய இந்தப் படத்திற்கு கலைஞர் கருணாநிதி கதை எழுதியுள்ளார். எம்ஜிஆர், விஎன்.ஜானகி, பிஎஸ்.வீரப்பா, எம்ஜி.சக்ரபாணி, புளிமூட்டை ராமசாமி, சி.கே.சரஸ்வதி உள்பட பலர் நடித்துள்ளனர்.