More
Categories: Cinema History latest news

ஜெயலலிதா மீது எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு இருந்தது உண்மைதான்!.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்!..

புரட்சிக்கலைஞர் எம்.ஜி.ஆர் தன்னுடைய பொது வாழ்விலும் சரி சினிமா வாழ்விலும் சரி மக்களுக்கு நல்லது பண்ணவேண்டும் என்ற ஒரே கருத்தை நோக்கி தான் அவரது எண்ணமும் பயணித்தது. அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தான் நடித்த படங்களின் மூலம் அதை செய்து வந்தார்.

Advertising
Advertising

இதனால் ஈர்க்கப்பட்ட ரசிக பெருமக்கள் அவரை ஒரு தலைவராகவே கொண்டாட ஆரம்பித்தனர். போதிய அளவு படிக்கவில்லை என்றாலும் சமூக கருத்துக்களை நல்ல விதத்தில் மக்களிடையே பதியவைக்க வேண்டும் என்ற மனப்பாங்கில் முன்னெடுத்து நகர்ந்தார்.

மேலும் படித்த பெருமக்களை எப்பொழுதும் தன் பக்கத்தில் அமரவைத்து அவர்களிடமிருந்து தன்னுடைய அறிவை பெருக்கிக் கொள்வதில் இவரும் சரி சிவாஜியும் சரி ஒரே வகையினர். எம்.ஜி.ஆரின் முற்போக்கான சிந்தனைகளுக்கு காரணம் படித்தவர்களிடமிருந்து அறிவுச்சிந்தனைகளை செவி வழியாக உள்வாங்கி அதன் மூலம் நல்ல பல செயல்களை செய்து வந்தார்.

இதன் மூலம் ஈர்க்கப்பட்டவர்தான் ஜெயலலிதாவும். ஜெயலலிதா மீது எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு வரக் காரணமே ஜெயலலிதா பெற்ற ஆங்கில அறிவு தானாம். அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதா ஏராளமான புத்தகங்களை வாசிக்கும் பழக்கமுடையவர் என்பதால் அவரிடத்தில் கல்வியறிவு போதிய அளவு இருந்ததனால் தான் ஜெயலலிதாவிற்கு முன்னுரிமை கொடுத்தார். மற்றபடி ஒரு சிலர் சொல்வது போது அந்த மாதிரி ஈர்ப்பு ஒன்றும் இல்லை என எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த எழுத்தாளரும் இயக்குனருமான ஏ.எஸ்.பிரகாஷம் தெரிவித்தார்.

Published by
Rohini