Cinema History
அந்த குற்றவாளியுடன் நான் இருப்பதா? எம்.ஜி.ஆர் தவிர்த்து அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்…
MGR: தமிழ் சினிமாவில் எல்லாரிடமும் மரியாதையாக நடப்பவர் தான் எம்.ஜி.ஆர். ஆனால் அவரே ஒரு இயக்குனரை ஒதுக்கிய ஆச்சரிய சம்பவம் நடந்து இருப்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் 70ஸ் இயக்குனர்கள் என்றால் பாலசந்தருக்கு அப்புறம் நியாபகத்துக்கு வருபவர் பாலுமகேந்திரா தான். அவரின் இயக்கத்தில் உருவாகும் படங்களுக்கென்ற தனி ரசிகர்கள் கூட்டம் இன்றளவும் கோலிவுட்டில் உள்ளனர். அவரின் இயக்கத்தில் பெரிய வெற்றியை பெற்று இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நிறைய சோதனைகளை சந்தித்து வந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் நடிக்க வேண்டிய படம்.. சிம்புவை வைத்து களமிறங்கும் இயக்குனர்! இது புது அப்டேட்டால இருக்கு
கோலிவுட்டில் வெற்றிக்கொடியை பறக்க விட்டு கொண்டு இருந்த போது அவருக்கும் நடிகை அர்ச்சனாவுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை. இதையடுத்து பாலுமகேந்திராவுக்கு நடிகை சோபாவுக்கும் காதல் மலர்ந்தது. இது கோலிவுட்டில் தீயாக பரவ இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் ஒன்றாக வாழும் முன்னரே சோபா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
ரசிகர்களிடம் இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு பாலுமகேந்திராவே காரணமாக கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் பாலுமகேந்திராவை அந்த கேஸில் இருந்து எம்.ஜி.ஆர் தான் காப்பாற்றியதாக கிசுகிசுக்கள் தொடங்கியது. இது எம்ஜிஆரை பெரும் பாதித்ததாம். இதையடுத்து நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இணைந்து நடத்திய நிகழ்வில் பாலுமகேந்திரா, எம்ஜிஆருடன் நெருங்கி நின்றார்.
இதையும் படிங்க: அப்பாவை மிஞ்சிடுவாங்க போல! கிரிக்கெட்டர் முதல் பாலிவுட் நடிகர் வரை இத்தனை பிரேக்கப்களா?