Actress Sarojadevi: சரோஜா தேவி தமிழ் சினிமாவின் பழங்கால முன்னணி நடிகைகளில் ஒருவர். நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதநாயகியாக அறிமுகமானார். பின் அன்பே வா, ஆலயமணி, தாய் சொல்லை தட்டாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு அபிநய சரஸ்வதி, கன்னட பைங்கிளி போன்ற பல பெயர்களும் உள்ளன. இவர் மேலும் ஒன்ஸ்மோர், ஆதவன் போன்ற திரைபப்டங்களின் மூலம் இக்கால கதாநாயகர்களுடன் இணைந்தும் நடித்துள்ளார். சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.
இதையும் வாசிங்க:சிவாஜியை பார்க்கும் ஆர்வத்தில் விழுந்தடிச்சு ஓடிய வடிவேலு! நடந்த சம்பவமே வேற – நடிகர் திலகம்னா சும்மாவா?
அந்த காலத்தில் தனது நடிப்பின் மூலமும் தனது செல்லமான கொஞ்சும் பேச்சாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவரின் தமிழ் உச்சரிப்பு அக்கால மக்களை மிகவும் கவர்ந்தது. மேலும் இவர் பெரிய இடத்து பெண், நாடோடி, தர்மம் தலைக்காக்கும் போன்ற பல வெற்றிப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் எம்ஜிஆர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பாராம். அனைவரையும் பற்றி யோசிக்கும் ஒரு மனிதர் எம்.ஜி ஆர்தான் என கூறியுள்ளார். இதற்கு இவர் வாழ்வில் நடந்த சம்பவமே மிகச்சிறந்த உதாரணம். அந்த காலத்தில் கோல்டன் ஸ்டுடியோவில் நடிகர் சங்கத்திலிருந்து பல வித கடைகளை சந்தை போல் வைப்பது வழக்கம். சினிமா பிரபலங்கள் ஒருவரையொருவர் சந்திக்கவும் பேசிக்கொள்ளவும் உருவாக்கப்பட்டதுதான் அந்த சந்தை.
இதையும் வாசிங்க:ரஜினிக்காக விஜய் அப்படி பேசலயாம்… பின்னாடி இருக்கும் சூட்சமம் என்னனு தெரியுமா?…
அந்த சந்தைக்கு சரோஜா தேவியும் சென்றுள்ளார். அங்கு இருந்த ஒரு கடையில் நெக்லஸ் ஒன்றினை பார்த்துள்ளார். அப்போது அதை வாங்க ஆசைப்பட்ட சரோஜாதேவி அதனை கடைக்காரரிடம் கேட்டுள்ளார். அதற்கு கடைக்காரர் அதனை சாவித்திரி அம்மா புக் செய்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து அந்த நகை வேண்டுமென கேட்டுள்ளார். உங்களுக்கு வேண்டுமானால் புது நகையை செய்து தருகிறோம் என கூறியுள்ளனர். ஆனால் அதனை மறுத்திருக்கிறார் சரோஜா தேவி. பின் கடைக்காரர் நகை இல்லை என கூற சரோஜாதேவி அக்கிருந்து கிளம்பிவிட்டாராம்.
பின் எம்ஜிஆர் சரோஜாதேவி நடிப்பில் வெளியான தாயைகாத்த தனயன் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அப்போது மேடையில் வைத்து படத்தில் நடித்த அனைவருக்கும் பரிசுபொருள் கொடுத்துள்ளனர். சரோஜாதேவிக்கும் கொடுத்துள்ளனர். மேடையை விட்டு இறங்கிய சரோஜா தேவி அதனை பிரித்து பார்த்துள்ளார். அப்போது அதில் அவர் ஆசைப்பட்ட நெக்லஸ் இருந்துள்ளது.
இதையும் வாசிங்க:நாட்டாமை படத்துல பொன்னம்பலம் வாங்கி சம்பளம் இவ்வளவுதானா!.. என்னமோ நினைச்சா!.. அடப்பாவமே!..
அப்போது அதிர்ச்சியான சரோஜாதேவியிடம் எம்ஜிஆருடன் இருந்தவர்கள் நடந்ததை கூறினர். அப்போது சரோஜாதேவியை அந்த சந்தையில் எம்ஜிஆர் பின் தொடர்ந்ததாகவும் அவர் அக்கடையில் நெக்லஸ் கேட்டதனால் அதைபோலவே ஒரு நெக்லஸை ஆர்டர் செய்து அதை வெற்றி விழாவில் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர். மற்றவர்களின் ஆசைகளையும் நிறைவேற்றும் பெரிய குணம் எம்ஜிஆரிடம் உண்டு என எம்ஜிஆருக்கு சரோஜாதேவி புகழாரம் சூட்டினார்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…