புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்ற பல பெயர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் எம்ஜிஆர். மக்கள் மேம்பாடு, மக்களுக்காக பல உதவிகளை செய்தல் போன்றவைகளையே தம் எண்ண ஓட்டங்களாக வைத்திருப்பவர். அதனாலேயே புரட்சி நடிகர் என போற்றப்பட்டார்.
கிட்டத்தட்ட 50க்கு பிறகுதான் ஒரு லட்சிய நடிகராக மாறினார் எம்ஜிஆர். 30, 40களில் எல்லாம் ஒரு துணை நடிகராக கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு தன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார். ஹீரோவாக சாயா என்ற படத்தில் எம்ஜிஆர் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : சொல்றதையும் செய்வேன்! சொல்லாததையும் செய்வேன் – ஹுக்கும்! கண்டம் தாண்டி மாஸ் காட்டிய ரஜினி
அதுவரைக்கும் இரண்டாம் தர நடிகராக இருந்து 40 க்கு பிறகு கதாநாயகனாக நடித்த படமாம் அது. அந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக குமுதினி என்ற நடிகை நடித்தாராம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அந்த நடிகையின் மடியில் எம்ஜிஆர் படுத்துக் கொண்டிருக்கும் மாதிரியான காட்சியாம்.
அந்தக் காட்சியில் எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த நடிகையின் கணவன் அங்கு படப்பிடிப்பை பார்க்க வந்தாராம். எம்ஜிஆர் மடியில் படுத்ததும் அந்த நடிகையின் கணவன் திடீரென குறுக்கீட்டு ‘ நேற்று வரைக்கும் ஒரு துணை நிலை நடிகராக நடித்தவன் நீ, நீ என் மனைவியின் மடியில் படுப்பதா?’ என்று கூறிவிட்டு எம்ஜிஆரை தள்ளிவிட்டு நடிகையை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாராம்.
இதையும் படிங்க : ஜெயிலர் கதைக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இப்படி ஒரு கனெக்ஷனா!. நல்லா வச்சி செஞ்சிட்டியே நெல்சா!…
உடனே எம்ஜிஆர் தலைகவிழ்ந்தபடி நின்றாராம். அதன் பிறகு அந்தப் படத்தின் இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் வந்து ‘கவலைப்படாதே, ஒரு நாள் இந்த சினிமாவே உன் காலடியில் வந்து விழும் ’ என்று ஆறுதல் கூறினார்களாம். இந்த சம்பவத்தை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான துரை கருணா கூறினார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…