Connect with us
mgr

Cinema History

கவர்ச்சி பாடகி இந்தப் பாடலை பாடுவதா? கேள்வி கேட்ட எம்.எஸ்.விக்கு தக்க பதிலடி கொடுத்த எம்ஜிஆர்

Actor MGR: எம்ஜிஆரை பொறுத்தவரைக்கும் தான் நடிக்கும் படங்களில் இவர் தான் நடிக்க வேண்டும், இவர் தான் இசையமைக்க வேண்டும் ,இவர்தான் பாட வேண்டும் என எல்லா துறைகளிலும் எம்ஜிஆரின் அனுமதி என்பது ஒரு வரைமுறையாகவே இருந்து வந்தது.

அவர் மட்டுமில்லாமல் சிவாஜியின் படங்களிலும் அது அவ்வப்போது நடக்கிற விஷயமாகவே இருந்தது. அந்தளவுக்கு இருவரும் சினிமாவில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்ற நடிகர்கள் என அனைவருக்கும் தெரியும். ஏதாவது பிரச்சினை என்றால் எம்ஜிஆரின் முடிவே கடைசி முடிவாகவும் இருந்திருக்கிறது.

இதையும் படிங்க: பாபுவின் மகளாக இருந்த ஷாலினி… அஜித்தின் மனைவியான கதை.. எப்படி நடந்தது இந்த மேஜிக்..?

அப்படிப்பட்ட சம்பவம்தான் மகாதேவி படத்திலும் அரங்கேறியிருக்கிறது. மகாதேவி படம் எம்ஜிஆர் மற்றும் சாவித்ரி நடித்து வெளியான மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகும். அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி மற்றும் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

அந்தப் படத்தில் சாவித்ரி உருகி பாடும் ஒரு பாடல் இடம் பெறும். அந்தப் பாடலை இவர் பாடினால்தான் நன்றாக இருக்கும் என கண்ணதாசன் பாடகி ஜமுனாவை பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் ஜமுனா அந்தக் காலத்தில் கவர்ச்சி பாடலை பாடி பெயர் பெற்றவர்.

இதையும் படிங்க: அஜித்துக்கு நடிப்பில் டெடிகேஷனே இல்லை.. சூர்யா ஃபீல்ட் அவுட் நடிகர்.. பகீர் கிளப்பும் பிரபல நடிகர்..!

அதனால் எம்.எஸ்.வி கவர்ச்சி பாடலை பாடும் ஒரு பாடகி உருகி பாடும் பாடலை பாடுவதா? முடியவே முடியாது என கூறியிருக்கிறார். இந்த பிரச்சினை அப்படியே எம்ஜிஆரிடம் கொண்டு போனதாம். அதற்கு எம்ஜிஆர் ‘கவர்ச்சி பாடலை பாடிய பாடகி இந்த பாடலை பாடக்கூடாது என்ற வரைமுறை எல்லாம் இல்லை. அதுவும் போக கவர்ச்சி பாடகி என முத்திரையும் குத்த முடியாது’ என சொல்லிவிட்டு அந்த பாடகியையே பாட சொன்னாராம் எம்ஜிஆர்.

அதன் பிறகு அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் எந்தளவு பிரபலமானது? எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என ஊரறிந்த விஷயம்.

இதையும் படிங்க: நடுக்கடலில் வித்தியாசமான முறையில் திருமணம்! ஒரே வரியில் திருமண உறவை முறித்த நடிகை

google news
Continue Reading

More in Cinema History

To Top