Connect with us
mgr

Cinema History

குழந்தை இல்லாத ஏக்கம்!.. எம்.ஜி.ஆருக்கு இருந்த செண்டிமெண்ட்!.. இப்படி எல்லாம் யோசிப்பாரா!…

திரையுலகில் எம்.ஜி.ஆர் எவ்வளவு உச்சத்தை தொட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். வறுமை காரணமாக பள்ளி படிப்பைவிட்டுவிட்டு சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க துவங்கினார். 30 வருடங்கள் நாடக அனுபவம் பெற்ற எம்.ஜி.ஆர் தனது 37வது வயதில் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் 10 வருடங்கள் கழித்தே ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

பல ஹிட் படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. இதுவரை எந்த நடிகருக்கும் இவ்வளவு ரசிகர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்றும் சொல்லலாம். அதனால்தான் அவர்கள் மீது இருந்த நம்பிக்கையில் அரசியலிலும் நுழைந்து நாட்டின் முதல்வராக மாறினார்.

இதையும் படிங்க: இவர் ஹீரோன்னா படத்தை வாங்க மாட்டோம்!.. முதல் படத்தில் வந்த நெருக்கடி!.. மனமுடைந்த எம்.ஜி.ஆர்…

சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி.. முக்கிய ஆளுமையாக இருந்தார். ஆனால், எல்லாம் இருந்தும் அவருக்கென ஒரு வாரிசு இல்லை. எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணி என்பவரை திருமணம் செய்தார். ஆனால், நோய்வாய்ப்பட்டு அவர் இறந்து போனார். அவருக்கு பின் சதானந்தவதி என்கிற பெண்ணை திருமணம் செய்தார். அவரும் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.

3வதாக எம்.ஜி.ஆர் ஜானகியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த மூவருக்குமே குழந்தை இல்லை. இதனால், எம்.ஜி.ஆருக்கு வாரிசு என ஒன்று இல்லாமலேயே போய்விட்டது. இதை எம்.ஜி.ஆர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் உள்ளுக்குள் அந்த சோகம் அவருக்கு இருந்தது.

எம்.ஜி.ஆரின் நெருங்கிய வட்டத்தில் இருந்தவரும், வசனகர்த்தாவுமான ரவீந்தரனுக்கு திருமணம் நிச்சயமானபோது எம்.ஜி.ஆரிடமும் அவரின் அண்ணன் சக்கரபாணியிடமும் வந்து சொன்னார். ‘உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?’ என எம்.ஜி.ஆர் கேட்க, ‘ஒரு கிராம் தங்கத்தின் விலை 16 ரூபாய். அதை கொடுங்கள் போதும்’ என ரவீந்தரன் சொல்ல, சக்கரபாணி அந்த 16 ரூபாயை ரவீந்தரனிடம் கொடுத்தார்.

mgr janaki

எம்.ஜி.ஆர் கையில் வாங்க முடியவில்லையே என்கிற ஏக்கத்தில் இருந்த ரவீந்திரன் அதை அவரிடமே கேட்டார். சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர் ‘என்ன புரியாத ஆளா இருக்கீங்க!. தாலிக்கு தங்கம் வாங்க போறீங்க.. அண்ணன் பிள்ளை குட்டிக்காரார். எனக்கு அந்த பாக்கியம் இல்லை. அதனால்தான் அவரை கொடுக்க சொன்னேன்’ என சொன்னாராம் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் திரையில் பாடியது எல்லாமே பின்னாளில் அவருக்கு நடந்தது. ஆனால், ‘எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னை போலவே இருப்பான்’ என அவர் பாடியது மட்டும் நடக்கவில்லை என்பதுதான் சோகம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top