Cinema History
யாரென சொல்லாமல் பெண்ணுடன் போனில் பேசிய எம்.ஜி.ஆர்… கடைசில அந்த பெண்ணுக்கு என்ன செஞ்சாரு தெரியுமா?…
Actor MGR: மக்கள் திலகம் என அழைக்கப்படுபவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவர் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகரை தாண்டி சிறந்த மனிதரும் கூட. மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர்.
இவர் சினிமாவின் மூலம் மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை கூறக்கூடியவர். இவரின் படங்கள் அனைத்தும் அந்த காலத்திலேயே தியேட்டர்களில் பல நாட்களாக ஓடியவை. இவர் நடித்த எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாகாரன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தன.
இதையும் வாசிங்க:எந்த நடிகரும் நெருங்காமல் பார்த்துக் கொண்ட நடிகையின் தந்தை! சினிமாவில் மகளை பெரியாளாக்க அப்பா எடுத்த முயற்சி
என்னதான் இவர் சினிமாவில் நடித்தாலும் நிஜ வாழ்வில் மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வருவார். இதனாலேயே இவர் பல மக்களின் மனதில் இன்றளவும் பெரிய அளவில் மதிப்பினை பெற்றுள்ளார். இவர் தாய் பத்திரிக்கை எனும் ஒரு பத்திரிக்கை நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இப்பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர் வலம்புரி ஜான். ஒரு முறை எம்.ஜி.ஆர் இவரின் வீட்டிற்கு போன் செய்துள்ளார். அப்போது ஜான் அங்கு இல்லாததால் அவரின் வீட்டு வேலைகார பெண் போனை எடுத்துள்ளார். அவரிடம் எம்.ஜிஆர் தன்னை எம்.ஜி.ஆர் என கூறாமல் எம்.ஜி.ராமசந்திரன் என கூறியுள்ளார். அதற்கு அப்பெண் ஐயா இப்போதான் ஆபிஸ் கிளம்பி போனாங்க என பதிலளித்துள்ளார்.
இதையும் வாசிங்க:விஜய் என்கிட்ட சத்தியம் வாங்கிட்டுதான் நடிச்சார்!.. முக்கிய அப்டேட்டை லீக் செய்த லோகேஷ்…
அதற்கு ‘நீ யார் பேசுவது?’ என கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். அதற்கு அப்பெண் நான் ‘இந்த வீட்டின் வேலைக்கார பெண் பேசுகிறேன், வீட்டில் இருக்கும் அனைவரும் வெளியூர் சென்றுவிட்டனர்’ என கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆர் அப்பெண்ணிடம் உன் பெயர் என்ன என கேட்டாராம். அதற்கு அப்பெண் என் பெயர் லட்சுமி என கூறியுள்ளார். மேலும் அவரை பற்றி அனைத்து தகவல்களையும் எம்.ஜி.ஆர் கேட்டுவிட்டு பின் ‘சரி நான் போன் செய்தேன் என ஜான் வந்ததும் கூறிவிடு’ என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாராம்.
அப்போது அந்த தகவலை வலம்புரி ஜான் வந்ததும் அப்பெண் அவரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் உன்னிடம் பேசியது எம்.ஜி.ஆர் என கூற அப்பெண் அவரை நம்பவே இல்லையாம். அவர் பெயர் எம்.ஜி.ராமசந்திரன் எனத்தானே கூறினார். எப்படி எம்.ஜி.ஆராக இருக்க முடியும் என மீண்டும் நம்பவில்லையாம். ஒரு நாள் எம்.ஜி.ஆர் வலம்புரி ஜானிடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து அதனை அப்பெண்ணிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதனை ஜானும் அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். அதற்கு அப்புறம்தான் அப்பெண் தன்னிடம் பேசியது எம்.ஜி.ஆர் என நம்பினாராம்.
இதையும் வாசிங்க:ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட விஜயகாந்தின் படம்! ஏன் மக்கள் ஏத்துக்கலனு தெரியல – வருத்தத்தில் பேசிய நடிகை