பல நடிகைகளுடன் தொடர்பு.. அசிங்கமாக எழுதிய பத்திரிக்கையாளர்.. எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி!...

by சிவா |
mgr
X

எம்.ஜி.ஆரிடம் எல்லோரும் வியப்பாக பார்ப்பதே அவரின் உதவும் குணம்தான். கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கும் வள்ளல் அவர். அதனால்தான் அவரை வள்ளல் என இப்போதும் ஏழை மக்கள் சொல்கிறார்கள். சிறு வயது முதலே வறுமையை பார்த்து வளர்ந்ததால் எல்லோருக்கும் பசியாற்ற வேண்டும், தன்னை தேடி வந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் கடைசிவரை உறுதியாக இருந்தார்.

அவரால் பலனடைந்தவர்கள் ஏராளம். சினிமா துறையில் மட்டுமல்ல. அவர் கண்ணில் படும் யாருக்கும் உதவும் குணம் கொண்டவர் அவர். அதேபோல், அவரை எதிரியாக நினைத்தவர்களுக்கும், அவரை அவமானப்படுத்தியவர்களுக்கும் கூட எம்.ஜி.ஆர் உதவி செய்தார் என்பதுதான் ஹைலைட்.

MGR

MGR

எம்.ஜி.ஆர் நடிகராக இருந்த போது தமிழ் சினிமா என்கிற பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த கரீம் என்பவர் தொடர்ந்து எம்.ஜி.ஆரை பற்றி தொடர்ந்து மிகவும் அசிங்கமாக எழுதி வந்தார். அதாவது, எம்.ஜி.ஆருக்கு இந்த நடிகையுடன் தொடர்பு, அந்த நடிகையுடன் தொடர்ந்து என தொடந்து அந்த பத்திரிக்கையில் எழுதி வந்தார். இந்த பத்திரிக்கையை எம்.ஜி.ஆரும் தொடர்ந்து பார்த்துவிடுவார்.

mgr

ஒருகட்டத்தில் பத்திரிக்கை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ஏழ்மை நிலைக்கு சென்றார் கரீம். அவர் மகனின் திருமணத்தை நடத்த கூட அவரிடம் பணம் இல்லை. எனவே, எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்பது என முடிவெடுத்தார். அவரை தேடி அவரின் வீட்டிக்கு சென்றபோது அவரை அடையாளம் கண்டு கொண்ட எம்.ஜி.ஆரின் உதவியாளர் அவரை வீட்டுக்குள்ளேயே விடவில்லை. ஆனால், அவரை உள்ளே விட சொன்ன எம்.ஜி.ஆர் அவரின் பிரச்சனையை கேட்டறிந்து அவருக்கு என்ன தேவையோ அதைவி அதிகமாக பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அங்கிருந்த உதவியாளரும், மற்றவர்களும் ‘அவர் உங்களை பற்றி எவ்வளவு அசிங்கமாக எழுதினார். அவருக்கு ஏன் உதவுகிறீர்கள்?’ என கேட்க எம்.ஜி.ஆர் கூலாக ‘என்னை தேடி வந்துவிட்டார். மறந்து விடுவதுதான் நல்லது’ என பதில் சொன்னாராம்.

அதனால்தான் அவர் பொன்மன செம்மல்!..

இதையும் படிங்க: ஒரே வருடத்தில் அறிமுகமாகி கவனிக்க வைத்த 5 இயக்குனர்கள்.. யார் யார் தெரியுமா?..

Next Story