Connect with us

Cinema History

ஒரே வருடத்தில் அறிமுகமாகி கவனிக்க வைத்த 5 இயக்குனர்கள்.. யார் யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கு முதல் படம் என்பது மிகவும் முக்கியமானதாகும். முதல் படத்தின் வெற்றியை பார்த்துதான் அடுத்து இயக்குனர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. 2010க்கு பிறகு தமிழ் சினிமாவில் புது முக இயக்குனர்கள் அதிகமாக வரத் துவங்கினர். அதற்கு பிறகு தான் பெரும் நடிகர்கள் கூட சின்ன இயக்குனர்கள் படங்களில் நடிக்கவும் தொடங்கினர்.

அதில் முக்கியமான வருடம் 2017 ஆம் ஆண்டு. 2017 ஆம் ஆண்டு தமிழின் நல்ல படங்களை கொடுத்த பல முக்கிய இயக்குனர்கள் அறிமுகமான ஆண்டு. அப்போது அறிமுகமான ஐந்து முக்கிய இயக்குனர்களை இப்போது பார்க்கலாம்.

இயக்குனர் ரத்தினகுமார்:

இயக்குனர் ரத்தினகுமார் 2017 ஆம் ஆண்டு மேயாத மான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்போது வெளியான மேயாத மான் திரைப்படம் அதுவரை வந்த தமிழ் சினிமாவில் இருந்து சற்று வேறுபட்ட ஒரு திரைப்படமாக இருந்தது.

meyadha maan

meyadha maan

ஒரு சிம்பிளான கதைகளத்தை கொண்டு சிறப்பான சிறப்பாக அந்த திரைப்படத்தை கொண்டு சென்றிருந்தார் இயக்குனர். இதனால் முதல் படத்திலேயே அதிக வரவேற்பை பெற்றார் ரத்தினகுமார்.

ஆர்க் சரவணன்:

இயக்குனர் ஆர்க் சரவணனும் 2017 ஆம் ஆண்டுதான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அவரது முதல் திரைப்படமாக மரகத நாணயம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். மரகத நாணயம் ஒரு மாயாஜால கதைகாலம் கொண்ட படம் என்றாலும் கூட அதை மிகவும் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் கொண்டு சென்றிருப்பார்.

maragatha nanayam

maragatha nanayam

முதல் படத்திலேயே அவரும் அதிக வரவேற்பு பெற்றார் அதற்குப் பிறகு தற்சமயம் வந்த வீரன் என்கிற திரைப்படத்தையும் இவரே இயக்கியிருந்தார்.

இயக்குனர் கோபி நயினார்

கோபி நயினார் 2014 ஆம் ஆண்டு தனது முதல் திரைப்படமாக அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். ஏற்கனவே இவர் எழுதி வைத்திருந்த கதையை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கத்தி என்ற திரைப்படமாக எடுத்ததாக ஒரு குற்றச்சாட்டை முருகதாஸ் மேல் வைத்திருந்தார்.

aram

aram

அதற்கு பிறகு தான் அறம் திரைப்படத்தை இயக்கினார். நயன்தாராவை முக்கிய கதாபாத்திரமாக கொண்ட இந்த திரைப்படம் அப்பொழுது வெகுவாக பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது.

ஸ்ரீ கணேசன்:

லோ பட்ஜெட்டில் சிறப்பான திரைப்படங்களை எடுத்த இயக்குனர்களில் ஸ்ரீ கணேசன் முக்கியமானவர். 2017 ஆம் ஆண்டு இவர் தனது முதல் திரைப்படமான எட்டு  தோட்டாக்கள் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு அப்போது அதிக வரவேற்பு இருந்தது. நடிகர் எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பும் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

லோகேஷ் கனகராஜ்

தற்சமயம் விக்ரம், கைதி, மாஸ்டர் என ஹிட் படங்களாக கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழின் பெரும் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் அறிமுகமான ஆண்டு 2017. தனது முதல் திரைப்படம் மாநகரம் திரைப்படத்தை 2017 ஆம் ஆண்டுதான் வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ். அந்த திரைப்படமும் அப்போது நல்ல வரவேற்பை பெற்றது.

எனவே 2017 ஆம் ஆண்டு பல இயக்குனர்களுக்கு முக்கியமான ஒரு வருடமாக இருந்தது.

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top