More
Categories: Cinema History Cinema News latest news

உயிரை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்!. நெகிழ்ந்து போய் பதிலுக்கு அமிதாப்பச்சன் என்ன செஞ்சாரு தெரியுமா?…

MGR: சிறு வயது முதலே கஷ்டப்பட்டு வளர்ந்ததால் பலருக்கும் உதவும் குணம் எம்.ஜி.ஆருக்கு இயல்பாகவே இருந்தது. அதோடு, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோரின் வழிகாட்டுதலால் எல்லோருக்கும் தன்னால் முடிந்த பல உதவிகளை செய்ய வேண்டும் என எப்போதும் நினைத்தவர் எம்.ஜி.ஆர்.

அதனால்தான் எம்.ஜி.ஆர் என்றவுடன் நடிகர், முதல்வர், பொன்மன செம்மல், வாத்தியார் என பல பட்ட பெயர்களையும் தாண்டி ‘வள்ளல்’ என அவர் மக்களால் நினைவுகூரப்படுகிறார். அவர் முன் யார் கஷ்டப்பட்டாலும் உடனே அவர்களை அழைத்து விசாரித்து அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடுவார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் செய்த உதவியால் ஜீரோ டூ ஹீரோவான நடிகர்… இப்போ டாப் சூப்பர்ஸ்டாரின் மாமனாராம்..! அட..!

சினிமாவில் சம்பாதித்த பணத்தில் பெருமளவு மற்றவர்களுக்கு உதவுவதற்கே எம்.ஜி.ஆர் செலவு செய்தார். இது எல்லோருக்கும் தெரியும். ஒருபக்கம் ஏழைகளுக்கு உதவினார் என்றால் மறுபக்கம் திரைத்துறையை சேர்ந்த பலருக்கும் பல வழிகளில் உதவிகளை செய்திருக்கிறார். குறிப்பாக கடனில் சிக்கி கஷ்டப்பட்டவர்களுக்கு பணம் கொடுத்து உதவியிருக்கிறார். சில நடிகர்கள் ஆர்வக்கோளாறில் படம் தயாரித்து நஷ்டமைந்த போது அவர்களுக்கும் உதவி செய்துள்ளார். வாய்ப்பில்லாத நடிகர்களுக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பும் கொடுத்திருக்கிறார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் கூலி என்கிற ஒரு படத்தில் நடித்தார். இந்த படம் 1983ம் வருடம் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது படத்தின் வில்லன் நடிகர் அமிதாப்பச்சனின் வயிற்றில் குத்திவிட்டார். இதில் நிலைகுலைந்து போன அமிதாப் கிட்டத்தட்ட கோமா நிலைக்கு போய்விட்டார். அவர் இறந்துவிட வாய்ப்பிருக்கிறது என மருத்துவர்களும் சொல்லிவிட்டனர்.

இதையும் படிங்க: ஆசையாக துவங்கிய படம்!. எம்.ஜி.ஆர் மீது வந்த கோபம்!.. கண்ணதாசன் செஞ்ச வேலைய பாருங்க…

அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு ‘என்ன செய்தால் அவரை காப்பாற்ற முடியும்?’ எனக்கேட்க வெளிநாட்டிலிருந்து ஒரு மருந்தை வரவழைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூற எம்.ஜி.ஆர் அந்த மருந்தை வரவழைத்து கொடுத்தார். அமிதாப்பச்சனும் உயிர் பிழைத்தார்.

எம்.ஜி.ஆரால் உயிர் பிழைத்ததை கேள்விப்பட்டு நெகிழ்ந்துபோன அமிதாப்பச்சன் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி சொன்னதோடு ‘நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்’ எனக்கேட்க எம்.ஜி.ஆரோ ‘எனக்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். இலங்கை தமிழர்களுக்கு நான் நிதி திரட்டி வருகிறேன். முடிந்தால் அதற்கு உதவுங்கள்’ என சொல்ல கூலி படத்தின் முதல் நாள் வசூலை நிதியாக எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் அமிதாப்பச்சன்.

இதையும் படிங்க: கலைஞர் மகனுக்கு வாலி எழுதிய பாடல்!.. கடுப்பாகி எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி…

Published by
சிவா

Recent Posts