More
Categories: Cinema History Cinema News latest news

எம்ஜிஆரை கிண்டலடித்த சந்திரபாபு.. அந்த ஆணவத்துக்கு புரட்சி தலைவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…

Actor Chandrababu: சந்திரபாபு பழங்கால காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். மேலும் இவர் நடிகரை தாண்டி நடனம், பாடல் என பன்முகத்திறமையும் கொண்டவர். குங்கும பூவே கொஞ்சும் புறாவே, புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை போன்ற பல பாடல்களின் மூலம் இவர் பிரபலமானவர்.

இவர் தமிழில் வெளியான தன அமராவதி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின் புதுமை பித்தன், சபாஷ் மீனா போன்ற திரைப்படங்களின் மூலம் இவர் மக்களிடையே பிரபலமானார். இவரின் நடையும் காமெடிகளை வெளிப்படுத்தும் விதமும் மக்களை வெகுவாக கவர்ந்தன.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:அப்போ வாய மூடிட்டுதான இருந்தீங்க… Me Too குறித்து நடிகை சீதாவின் பகிர் குற்றச்சாட்டு…

இவர் எம்ஜிஆருக்கு நெருக்கமானவரும் கூட. எம்ஜிஆரை மிஸ்டர் எம்ஜி ராமசந்திரன் என்றுதான் அழைப்பாராம். ஆனால் ஒரு காலத்தில் இவர் முன்னணியில் இருந்தபோது எம்ஜிஆரை இழிவாக பேசிவிட்டாராம். அப்போது எம்ஜிஆரின் ரசிகர்கள் இவர் மேல் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் எம்ஜிஆரோ தன்னை இகழ்ந்து பேசியிருந்தாலும் அதை மனதில் வைத்து கொள்ளாமல் சந்திரபாபுவிற்கு செய்த செயல் அவரின் மேன்மையான குணத்தை காட்டியது.

ஒரு முறை கிருஸ்துமஸ் பண்டிகையின் போது சந்திரபாபுவின் அண்ணன், அப்பா அனைவரும் அவரவர் இடத்திலிருந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடி கொண்டிருந்தனராம். ஆனால் சந்திரபாபு அந்த நேரத்தில் பெரிய கடனில் மூழ்கியிருந்ததால் பண்டிகை கொண்டாடும் அளவிற்கு அவரிடம் வசதி இல்லாமல் இருந்துள்ளது. அதனால் வீட்டிலேயே மது அருந்திவிட்டு இருந்தாராம். அவரது அக்கா அவருடன் அந்த நேரத்தில் இருந்துள்ளார்.

இதையும் வாசிங்க:ஆமா அவள நம்பி ஏமாந்துட்டேன்!.. காதலி மீது காண்டான பப்லு பிரித்திவிராஜ்!. அப்ப அது உண்மைதான் போல!..

அப்போது திடீரென வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க அவரது அக்கா வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு எம்ஜிஆரின் உதவியாளர் குஞ்சப்பன் வந்துள்ளார். உடனே அவர் கையில் இருந்த ஒரு கவரை கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம். உள்ளே பார்த்தால் 5000 ரூபாய் இருந்துள்ளது. அதனுடன் ஒரு லெட்டரும் இருந்துள்ளது. அதை சந்திரபாபு பார்க்கும் போது எம்ஜிஆரின் கையெழுத்து இருந்ததாம்.

உடனே சந்திரபாபு எம்ஜிஆருக்கு கால் செய்து ஹலோ எம்ஜி ராமசந்திரன் என கேட்டுள்ளார். உடனே எம்ஜிஆர் ‘குஞ்சப்பன் வந்தாரா?… பணத்தை கொடுத்தாரா?… கிருஸ்துமஸை நன்றாக மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்… மேலும் நாளை ராமண்ணாவுக்கு போன் செய்யுங்க.. பறக்கும் பாவை திரைப்படத்தில் நடிக்க அழைப்பார்.. சம்பளாமாக 1 லட்சம் ரூபாய் வாங்கி கொள்ளுங்கள்.. முன்பணமாக 10000 ரூபாய் வாங்கி கொள்ளுங்க… புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுங்கள்’ என கூறினாராம். அதைக்கேட்டு கணகலங்கி நின்றாராம் சந்திரபாபு.

தன்னை இகழ்ந்து பேசியவராக இருந்தாலும் தக்க சமயத்தில் உதவி செய்துள்ளார் எம்ஜிஆர்.

இதையும் வாசிங்க:தூக்கிவிட்ட எம்ஜிஆருக்கே ஆப்பு வைத்த இயக்குனர்… இதெல்லாம் நியாயமாப்பா…?!

Published by
amutha raja

Recent Posts