Connect with us
mgr sivaji

Cinema History

சிவாஜியை வைத்து படம் எடுத்தேன்.. எம்.ஜி.ஆரை வைத்து பணம் எடுத்தேன்!. சொன்ன இயக்குனர் யார் தெரியுமா?..

950களில் கதாசிரியராக திரையுலகில் நுழைந்தவர் ஏ.பி.நாகராஜன். நல்லவர், நல்ல தங்கை, டவுன் பஸ், நான் பெற்ற செல்வம் என பல திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மக்களை பெற்ற மகராசி படம் மூலம் இயக்குனராக மாறினார். 1965ம் வருடம் இவர் இயக்கிய திரைப்படம்தான் திருவிளையாடல். சிவாஜி கணேசன் நடித்த இந்த திரைப்படம் இப்போதுவரை பேசப்படுகிறது.

அதன்பின் சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, சீதா, திருவருட்செல்வர், தில்லானா மோகானாம்பள் ஆகிய படங்களை சிவாஜியை வைத்தார். இதில் தில்லானா மோகானாம்பாள் திரைப்படம் ஒரு சூப்பர் கிளாசிக் படமாக அமைந்தது. இந்த படத்தில் சிவாஜியும், பத்மினியும் சிறப்பாக நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: சிவாஜி வீட்டில் ஒரு எம்.ஜி.ஆர்!.. அது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!…

இந்த படத்தை தழுவிதான் கரகாட்டக்காரன் மற்றும் சங்கமம் ஆகிய படங்கள் வெளியானது. இவர் நடிப்பில் சிவாஜி நடித்த கடைசி திரைப்படம் ராஜராஜ சோழன். அதன்பின் சில திரைப்படங்களை இயக்கினார். ஆனால், ஒருகட்டத்தில் வறுமையில் சிக்கினார். அவர் இயக்கிய படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

எனவே, அவரின் நண்பர்கள் ‘நீங்கள் ஏன் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசக்கூடாது. அவர் நிச்சயம் உங்களுக்கு உதவுவார். கண்டிப்பாக ஒரு படம் நடித்து கொடுப்பார்’ என சொல்லவே ஏ.பி.நாகராஜனும் எம்.ஜி.ஆர் சந்தித்து பேசினார். அவரின் நிலையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் அவரின் நடிப்பில் நடிக்க சம்மதித்தார்.

இதையும் படிங்க: சிவாஜி தனக்கு செய்ததை பாக்கியராஜுக்கு செய்த எம்.ஜி.ஆர்!.. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!…

அப்படி உருவான திரைப்படம்தான் நவரத்தினம். 1977ம் வருடம் இப்படம் வெளியானது. நவராத்திரியில் சிவாஜி 9 வேடங்களில் வந்ததை போல நவரத்தினம் படத்தில் எம்.ஜி.ஆர் 9 கதாநாயகிகளுடன் நடித்தார். இப்படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்திருந்தார். ஸ்ரீபிரியா, ஜெயச்சித்ரா, எஸ்.வரலட்சுமி, லதா என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்து.

இந்த படம் வெளியாகி சில மாதங்களில் ஏ.பி.நாகராஜன் மரணமடைந்தார். அதற்கு முன் ‘சிவாஜியை வைத்து படம் எடுத்தேன். எம்.ஜி.ஆரை வைத்து பணம் எடுத்தேன்’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னார் ஏபி.நாகராஜன்.

இதையும் படிங்க: முதல் வாய்ப்புக்கு தூணாய் இருந்த தயாரிப்பாளர்… இன்றுவரை மறக்காமல் சிவாஜி குடும்பம் செய்யும் நன்றிக்கடன்!….

google news
Continue Reading

More in Cinema History

To Top