வடைக்கு ஆசைப்பட்ட எம்ஜிஆர்.. அதுல கூட மக்கள் திலகம் ஒசத்திதான்!.. உருவாகிய மெகா திட்டம்!..

MGR: சினிமாவிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர். இவர் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாகாரன் போன்ற பல திரைப்படங்களின் மூலம தனது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
இவர் சினிமாவை தாண்டி நிஜ வாழ்வில் மிகச்சிறந்த மனிதரும் கூட. தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களையும் மற்றும் அப்படத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் மிகுந்த மரியதையுடன் நடத்துவார். மேலும் முடியாதவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளையும் செய்யும் குணம் கொண்டவர். இதற்கு இவரது வாழ்வில் நடந்த சம்பவமே ஒரு சான்று.
இதையும் வாசிங்க:சரத்குமார் மீது செம கடுப்பில் இருந்த விஜயகாந்த்… கடைசில நடந்தது இதுதான்!..
ஒரு முறை எம்ஜிஆர் காரில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரமாய் ஒரு வயதான மூதாட்டி வடை விற்பதை கண்டுள்ளார். உடனே தனது உதவியாளாரிடம் அம்மூதாட்டியிடம் சென்று வடை வாங்கி வருமாறும் மேலும் 200 ரூபாயை கொடுத்து அதை மூதாட்டி கையில் கொடுக்காமல் பெட்டியில் போட்டுவிட்டு வரும்படியும் கூறியுள்ளார். உதவியாளரும் அதன்படியே செய்துள்ளார்.
பின் உதவியாளர் எம்ஜிஆரிடம் ‘எதற்காக அதிக பணம் கொடுத்தீர்கள்?’ என கேட்டுள்ளார். உடனே எம்ஜிஆர் அந்த 200 ரூபாய் பாட்டியின் வடைக்கு அல்ல. இத்தனை வயதிலும் வடை சுட்டு விற்கும் பாட்டியின் தன்னப்பிகைக்கான ஊக்கத்தொகை என கூறினாராம். மேலும் இவ்வாறு பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் எம்ஜிஆர்.
இதையும் வாசிங்க:சரவெடியாய் வெடித்த எம்ஜிஆர்… கலங்கி போன படக்குழு… எதுக்குனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…
ஒரு நாள் அந்த பாட்டி யார் தனக்கு இவ்வளவு ரூபாயை தருவது என கண்டறிவதற்காக பணம் போடும் பெட்டியை ஒளித்து வைத்துள்ளார். அப்போது எம்ஜிஆரின் உதவியாளரோ பெட்டி இல்லாததினால் சுற்றும் முற்றும் பார்த்தாராம். உடனே அந்த பாட்டி அவர்களை கண்டுகொண்டாராம்.
உடனே எம்ஜிஆருக்கு அருகில் வந்து இவ்வளவு நாள் ‘நீதான் சாமி பணம் கொடுத்தியா!... தங்க பஸ்பம் சாப்பிடுகிற நீ இந்த பாட்டியின் வடையையா சாப்பிட்ட’என கேட்டாராம். உடனே எம்ஜிஆர் அரசாங்கத்திடம் பேசி உங்களுக்கு இந்த தொகையை மாதா மாதம் கிடைக்குமாறு செய்கிறேன் என கூறினாராம். அவ்வாறு அவர் ஆரம்பித்த திட்டம்தான் முதியோர்களுக்கான பென்ஷன் திட்டம்.
இதையும் வாசிங்க:தக்காளிய வச்சு குட்டி ஸ்டோரி சொன்ன ரஜினிகாந்த்… யாருக்கு சொன்னாரு தெரியுமா?…