Connect with us
MGR

Cinema History

பெண் இயக்குனரின் மனதை காயப்படுத்திய எம்.ஜி.ஆர்… என்ன இருந்தாலும் இப்படியா பண்றது??

“நலம் நலமறிய ஆவல்”, “விலாங்கு மீன்”, “விலங்கு”, “பாசம் ஒரு வேஷம்”, “பவர் ஆஃப் உமன்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஜெயதேவி. இவர் 1970களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான வேலு பிரபாகரனை ஜெயதேவி காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

Jayadevi

Jayadevi

ஜெயதேவி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு தனது பதின் பருவத்தில் சிறப்பாக நடனமாடுபவராக திகழ்ந்தார். அப்போது எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்த “இதய வீணை” திரைப்படத்தில் குரூப் டான்சர்களில் ஒருவராக நடனமாடுவதற்கு ஜெயதேவிக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஜெயதேவி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகை. ஆதலால் மிகவும் மகிழ்ச்சியோடு அந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்றது. அப்போது அந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஜெயதேவி ஒரு நாள் எம்.ஜி.ஆர் அமர்ந்திருந்த நாற்காலிக்கு அருகில் சென்று கீழே அமர்ந்துகொண்டு அவரை மெய் மறந்து பார்த்துக்கொண்டே இருந்தாராம்.

MGR

MGR

ஒரு பெண் தன்னை இப்படி பக்கத்தில் அமர்ந்துகொண்டு தன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை முதலில் வியப்பாக பார்த்த எம்.ஜி.ஆர், அதன் பின் அவரை கண்டுக்கொள்ளவே இல்லையாம். ஆனால் ஜெயதேவி அடுத்த இரண்டு நாட்களும் ஷூட்டிங் நடக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் எல்லாம் எம்.ஜி.ஆரின் அருகில் அவரை பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாராம்.

ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்திற்கு அருகே ஒரு பெண்மணி வேர்க்கடலை விற்றுக்கொண்டிருக்க, அந்த பெண்மணியிடம் இருந்த வேர்க்கடலையை விலைக்கு வாங்கி, படக்குழுவினருள் உள்ள அனைவருக்கும் அள்ளி அள்ளிக்கொடுத்தாராம். ஆனால் ஜெயதேவிக்கு மட்டும் கொடுக்கவில்லையாம்.

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டர் ஆக்கியது இவர்தானா?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

Jayadevi

Jayadevi

அதே போல் ஒரு நாள் குரூப் டான்சர்கள் எல்லோருக்கும் தலா நூறு ரூபாய் நோட்டை பரிசாக அளித்தாராம் எம்.ஜி.ஆர். ஆனால் அன்று ஜெயதேவிக்கு மட்டும் கொடுக்கவில்லையாம். இது ஜெயதேவியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்று இரவு முழுவதும் தூங்காமல் அழுதுகொண்டே இருந்தாராம்.

அதற்கு அடுத்த நாள் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றபோது ஜெயதேவியை அழைத்த மேனேஜர் “தயாரிப்பாளர் உங்களை மெட்ராஸுக்கு அனுப்பச் சொல்லிவிட்டார். நீங்க சென்னைக்கு கிளம்பலாம்” என கூறி அவரை சென்னைக்கு அனுப்பிவிட்டனராம். கண்களில் கண்ணீரோடு ஜெயதேவி சென்னைக்கு புறப்பட்டு வந்துவிட்டாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top