நள்ளிரவில் எம்.ஜி.ஆருடன் நெருக்கத்தில் இருந்த கட்டழகி....! பார்த்து பதறிய நண்பர்...

ஒரு சமயம் எஸ்.ஏ. கோபாலகிருஷ்ணன் என்பவர் தன்னுடைய நாடகக்குழு கொஞ்சம் கொஞ்சமாக அழிவதை பார்த்து அதனால் பலபேருடைய வாழ்க்கை பறிபோகும் என பயந்து தனக்கு நண்பராக இருந்த நடிகர் நம்பியாரிடம் இந்த நாடக்குழுவுக்கு இரண்டு நாள் தலைமை தாங்கி நடத்தினால் அதனால் ஏற்படும் வருவாயை வைத்து கடனையும் பலபேரின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றி விடுவேன் என கூறினாராம்.
நம்பியாரும் சரி என சம்மதிக்க உடன் எம்.ஜி.ஆரும் நானும் ஒரு நாள் தலைமை தாங்குகிறேன் என கூற சனிக்கிழமை நம்பியார் தலைமை தாங்க வசூல் மழை பொழிந்ததாம். மறுநாள் எம்.ஜி.ஆர் வருவதை அறிந்த மக்கள் காலையில் இருந்தே கூட்டமாக வந்து காத்துக்கொண்டிருந்தனராம் அந்த நாடக கம்பெனிக்கு.
இதையும் படிங்கள் : ஷங்கருக்கு நூல் விட்ட ரஜினி…! 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகப்போகும் சரித்திரகதை…
இந்த கூட்டத்தை பார்த்து பயந்த எஸ்.ஏ. கோபாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆரை மக்கள் பார்த்தால் அவ்ளோதான். அவர்களுக்கு தெரியாமல் எப்படியாவது மேடைக்கு அழைத்துப் போய்விட வேண்டும் என நினைத்து மேடையின் பின்புறமாக அழைத்து சென்றாராம். முன்னாடி கோபாலகிருஷ்ணன், அவரை தொடர்ந்து எம்.ஜி.ஆர் போக நேரம் இரவு ஆகிவிட்டதாம். திடீரென ஒரு சத்தம் கேட்க திரும்பி பார்த்த கோபால கிருஷ்ணனுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டதாம்.
ஒரு கரு நிற கட்டுமஸ்தான பெண் ஒருத்தி எம்.ஜி.ஆரை கட்டி அணைத்து நின்று கொண்டு இருந்தாளாம். அதை பார்த்தும் கோபால கிருஷ்ணனால் நெருங்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு பலம் வாய்ந்தவளாய் இருந்தாளாம். சிறிது நேரத்தில் அந்த பெண் முத்தம் கொடுக்க முற்பட போராடி எம்.ஜி.ஆர் விடுபட இதெல்லாம் தப்பு என கூறினாராம். அதற்கு அந்த பெண் உங்களையே நினைத்து நினைத்து தான் என் கணவர் என்னை விட்டு போய்விட்டான் என கூறினாராம். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்ட ரசிகையாக இருந்திருக்கிறார் அந்த பெண். இந்த நிகழ்வை சாய் வித் சித்ரா புகழ் சித்ரா லக்ஷ்மணன் கூறினார்.