வருமான வரி கட்ட முடியாமல் தவித்த எம்ஜிஆர்!.. கடைசியில் அவருக்கு எட்டிய யோசனை என்ன தெரியுமா?..

by Rohini |   ( Updated:2023-02-14 04:18:38  )
mgr
X

mgr

அநேக மக்களின் துயரத்தை துடைத்தவர் புரட்சித்தலைவரான எம்ஜிஆர். ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் அன்பால் ஆட்கொண்டவர். வாரி வழங்கும் பெருமானாக இருந்தவர். ஆனால் அவரால் ஒரு காலகட்டத்தில் வருமான வரியை கட்ட முடியாமல் தவித்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

mgr1

mgr1

ஆம்,அது உண்மை. தமிழக முதலைச்சராக இருந்த போது ஒரு சமயம் அவர் கட்ட வேண்டிய வருமான வரி தொகை பத்து லட்சமாம். இந்த விஷயங்கள் பற்றி எம்ஜிஆருக்கு அவ்ளோவாக தெரியாதாம். குழந்தை போல இருந்திருக்கிறாராம். வருமான வரி பற்றி ஒரு விழிப்புணர்வு இல்லாமல் இருந்திருக்கிறார் எம்ஜிஆர்.

மொத்தமாக பத்துலட்சம் தொகைக்கு எங்கே போகிறது என்று யோசித்த எம்ஜிஆர் தனக்கு உரிய சத்யா பாமா ஸ்டூடியோவை விற்க முயற்சி செய்திருக்கிறார். 80 கிரவுண்ட் சொத்துடைய சத்யா பாமா ஸ்டூடியோவை இந்த பத்து லட்சம் தொகைக்காக விற்கவா? என்று எம்ஜிஆரின் நலன் விரும்பிகள் ஆலோசனை கூறியிருக்கின்றனர்.

mgr2

mgr2

அதன் பிறகே ஒரு வங்கியில் எம்ஜிஆருக்காக லோன் போட்டு அந்த தொகையை பெற்றுக் கொடுத்திருக்கின்றனர். அதன் பிறகே அந்த வருமான வரியை கட்டியிருக்கிறார் எம்ஜிஆர். தன்னுடைய சமயோஜித புத்தியாலும் அறிவாலும் தன் ஆளுமையை வெளிப்படுத்தி வந்த எம்ஜிஆர் இந்த ஒரு சின்ன விசயத்தை மறந்திருக்கிறார் என்று பிரபல சினிமா ஃபைனான்சியர் ரகுநந்தன் கூறினார்.

இதையும் படிங்க : ரஜினியின் பேரனுக்கு இப்படி ஒரு நிலைமையா?.. சத்யராஜ் சொன்னதை உண்மையாக்கிய தனுஷ்!..

Next Story