More
Categories: Cinema News latest news

எம்.ஜி.ஆர் அந்த விஷயத்துல கொடுத்து வச்சவரு..! பிரபல தயாரிப்பாளரிடம் புலம்பிய சிவாஜி கணேசன்..!

Sivaji Ganesan: தமிழ்சினிமாவில் பெரிய புகழில் இருந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆனால் அவரால் அரசியலில் பெரிய இடத்தினை பிடிக்க முடியவில்லை. அதே போல, இன்னும் சில விஷயங்களில் கூட எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது தனக்கு கிடைக்கவே இல்லை என வருந்தி இருக்கிறாராம்.

பெரிய கஷ்டப்பட்டு நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவாஜி கணேசன். தன்னுடைய படத்தில் இருக்கும் அனைவரிடத்திலும் பாரபட்சம் இல்லாமலே பழகுவாராம். அது லைட்மேனாக இருந்தாலும் சரி பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் சரி காட்டும் பாசம் என்னவோ ஒரே மாதிரியாக இருக்குமாம். 

இதையும் வாசிங்க:ரஜினியை ஏமாற்றிய சினிமா உலகம்!.. புரியவைத்து தூக்கிவிட்ட கமல்.. இவ்வளவு நடந்திருக்கா?!…

அப்படி அவருக்கும் தனக்குமான பிணைப்பினை கலைப்புலி தாணு ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அதில் இருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் பேட்டியில் இருந்து, ஒருநாள் தாணு காரில் நந்தனம் தேவர் சிலை அருகில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது சிவாஜி கணேசன் உதவியாளரும், டிரைவருமான முருகன் என்பவரிடம் இருந்து சிவாஜி சார் உங்களை சந்திக்க விரும்புவதாக தகவல் வந்து இருக்கிறது.

உடனே நேரடியாக தாணு கால் செய்து விட்டாராம். போனை எடுத்த சிவாஜி, புலி, எங்கிருக்கே? என்று கேட்டிருக்கிறார். தான் நந்தனம் கிட்ட போய் கொண்டு இருப்பதாக தாணுவும் கூறினாராம். உடனே வீட்டுக்கு வா. ரெண்டு பேரும் சாப்பிடுவோம். எப்போ வருவ எனக் கேட்டாராம். அவர் இப்படி கேட்க ஐந்தே நிமிடத்தில் அவர் வீட்டுக்கு சென்று விட்டார் தாணு.

அப்போ சிவாஜியுடன் சிங்கப்பூர் டி.டி. துரை என்பவரும் இருந்தாராம். மூவருமாய் சாப்பிட்டு விட்டு டி.டி.துரை கிளம்பி விட்டார். அவர் போன சில நொடிகளில் அத்தணை நேரம் சிரித்து கொண்டு இருந்த சிவாஜி முகம் வெறிச்சோடி விட்டது. அந்த சமயத்தில் தான் அவரது பேத்தியின் கணவரும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுமான சுதாகரன் ஜெயிலில் இருந்தார்.

இதையும் வாசிங்க:இதுவரை நடிக்காத கதையில் ரஜினி!. சம்பவம் செய்யப்போகும் தலைவர் 170!…

அதுபற்றி பேசிய சிவாஜி சார், இப்படி ஒரு சூழலில் என்னை கடவுள் ஏன் தான் வச்சிருக்காரோ. குழந்தைகள் முகத்தைப் பார்க்க முடியலை. நிம்மதி இல்லாம இருக்காங்க. நான் எதைச்சொல்லி அவங்களை சமாதானப்படுத்துவேன்? இதுக்கு என்னால் எதுவும் செய்ய முடியலையே. அண்ணன் எம்.ஜி.ஆர். கொடுத்து வெச்சவரு. நல்ல பேரு, புகழ் செல்வாக்கோட போய் சேர்ந்தாரு.

நான்தான் அந்த பஸ்ஸை `மிஸ்’ பண்ணிட்டேன்’ என்றாராம். அப்படி அவர் சொல்லும்போதே குரலில் அத்தனை விரக்தி இருந்தது. நான் அவரை என்னால் முடிந்த மட்டும் சமாதானப்படுத்தினேன். அவர் தாணுவிடம் என்னமோ புலி! இதையெல்லாம் உன்கிட்ட சொல்லணும்னு தோணிச்சு என்றாராம். சிவாஜி தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைக்க ஒரு சுமைதாங்கியாக என்னை யோசித்தது சந்தோஷமாக இருந்தது தாணு கூறியிருந்தார்.

Published by
Akhilan

Recent Posts