பண பாக்கி இருக்கவே கூடாது!..தரவில்லை என்றால் எம்.ஜி.ஆர் என்ன செய்வாரு தெரியுமா?..
எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் புரட்சித் தலைவராக, தமிழகத்தின் தன்னிகரில்லா முதல்வராக விளங்கினாலும் அவரது சினிமா பயணத்தின் தொடக்க காலத்தில் எண்ணிலடங்கா தடைகளை தாண்டி வந்தவர். சினிமாவில் நுழைந்த போது பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார் எம்.ஜி.ஆர்.
மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் என மக்களால் அன்பால் அழைக்கப்பட கூடிய அளவிற்கு தன்னுடைய படத்தின் வசனங்களாலும், கதைகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.
தன்னை பற்றி சிந்தித்ததை விட மற்றவர்களின் நிலையை பற்றி எண்ணிய நேரம் தான் அதிகம். இது அனைவரும் அறிந்த ஒன்று. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஒன்று நடந்திருக்கிறது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குட்டிபத்மினி அந்த காலத்தில் அனைத்து முன்னனி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.
இவர் தான் தற்போது எம்.ஜி.ஆரை பற்றி சில ஆச்சரியமான தகவலை பகிர்ந்தார். அவர் கூறும்போது எப்பவுமே ஒரு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை எம்.ஜி.ஆர் கடைசியில் தான் நடிப்பாராம். அப்போது கூட நடிக்கும் நடிகர்களிடம் பண பாக்கி ஏதும் இருக்கா என கேட்பாராம். யாராவது இருக்கு என்று சொன்னால் அந்த பணத்தை படக்குழு செட்டில் செய்த பிறகே நடிக்க ஆரம்பிப்பாராம். கிளம்பி போய்விடுவாராம். சக நடிகர்களுக்கு கிடைக்க கூடிய ஊதியம் சரிவர கிடைக்கவில்லையென்றால் எந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியோ அந்த படத்திற்கு அதுவே க்ளைமாக்ஸாக மாறிவிடுமாம்.