More
Categories: Cinema History Cinema News latest news

எம்.ஜி.ஆர் தான் முதல்வர்… 19 ஆண்டுக்கு முன்னர் கணித்த பட்டுக்கோட்டையார்… இந்த பாடல் தானா?

MGR: தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் எம்.ஜி.ஆர் தனக்கு தேவையானவற்றை தன்னுடைய படக்குழுவிடம் இருந்து சரியாக எடுத்துக்கொள்வார். நடிப்பால் உயர்ந்தது போல அவரின் சினிமா பாடல்களும் அவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு லட்டு மாதிரி பாடல்களை எழுதிக்கொடுத்தவர் தான் பட்டுக்கோட்டையார்.

சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாட்டு எழுதுவதில் வல்லவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவரை சினிமா உலகம் பட்டுக்கோட்டையார் எனச் செல்லமாக அழைக்கும். ஆனால் எம்.ஜி.ஆருக்கு நிறைய திராவிட பாட்டுக்களை எழுதியும் இருக்கிறார். 

Advertising
Advertising

இதையும் படிங்க: என்னப்பா அப்டேட்னு விளையாடிக்கிட்டு இருக்கீங்க… விடாமுயற்சியை விட்டு தொலைங்கையா… காண்டான ரசிகர்கள்!

29 வயது வரை மட்டுமே வாழ்ந்தவர். சினிமாவில் 5 ஆண்டுகள் மட்டுமே தன்னுடைய பாடல்களால் உறுதியான இடத்தினை தக்க வைத்தார். அவர் எம்.ஜி.ஆர் இயக்கத்தில் வெளிவந்த நாடோடி மன்னன் படத்திலேயே அவர் முதல்வர் ஆவார் என்பதை உறுதியாக சொல்லி இருந்தார்.

அதிலும் அப்போது எம்.ஜி.ஆர் கட்சி கூட துவங்கவில்லை. கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்க தரிசனமாக சொல்லி இருந்தார். சும்மா கிடந்த நிலத்தை கொத்தி என்ற பாடலில் நானே போடப்போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம், நாடு நலம் பெறும் திட்டம், நன்மை புரிந்திடும் திட்டம், நாடு நலம் பெறும் திட்டம் என்ற வரிகளை எழுதி இருந்தார்.

இதையும் படிங்க: அந்த படத்த தூக்கி நம்ம படத்துல சொருவு!.. இப்படி ஆயிட்டாரே அஜித்!.. விளங்குமா விடாமுயற்சி?!…

இதே மாதிரி எம்.ஜி.ஆருக்கு அருமையான பாடல்களை கொடுத்த பட்டுக்கோட்டையார் திடீரென தவறினார். அவரை சிறப்பிக்கும் விதமாக என்னுடைய முதல்வர் நாற்காலியில் இருக்கும் நான்கு கால்களில் மூன்று கால்கள் யார் எனத் தெரியாது.

ஆனால் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாருடையது எனக் கூறினார். சில வருடங்களில் புகழின் உச்சிக்கு சென்ற பட்டுக்கோட்டையார் உயிர் தூக்கத்திலேயே போனது. இதை தாங்கிக்கொள்ள முடியாத கண்ணதாசன் பல நாட்கள் பாடல் எழுதாமலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts