எம்ஜிஆர் படத்தில் வெறும் 5 ஆயிரம் ரூபாய் சம்பளம்… ஆனா அடுத்த படத்திலேயே ஒரு லட்சம்! யாரு அந்த லக்கி நடிகை?

by sankaran v |   ( Updated:2025-04-06 22:28:41  )
mgr
X

mgr

எம்ஜிஆர் படத்துல நடிச்சதால நடிகைக்குக் கிடைச்ச அதிர்ஷ்டத்தைப் பாருங்க. பெரிய திருப்புமுனையாகி விட்டது என்றே சொல்லலாம். அந்த நடிகை யார்? அது என்ன படம்னு பார்க்கலாமா…

திருடாதே படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தவர் சரோஜாதேவி. அது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியை நடிக்க வைக்க ஆரம்பத்தில் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனுக்கு தயக்கம் இருந்தது. அவருக்குள்ளே ஒரு தயக்கம் இருந்தது.

அதைத் தெரிந்து கொண்ட எம்ஜிஆர் இந்தப் பொண்ணைத்தான் நாடோடி மன்னன் படத்துல ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிக்க வைக்கலாம்னு இருக்கேன் என்றார். அதைக் கேட்டதும் நீங்க நாடோடி மன்னன் படத்துல நடிக்க வைக்கிறதா இருந்தா இந்தப் பொண்ணை திருடாதே படத்தில் நடிக்க வைக்கிறேன் என்றாராம் ஏஎல்.சீனிவாசன்.

சரோஜாதேவிக்கு சம்பளம் பேசுவதற்காக கதாசிரியர் மா.லெட்சுமணனும், தயாரிப்பாளர் ஏஎல்.சீனிவாசனும் அவரது அம்மாவிடம் போய் பேசியுள்ளார்கள். அப்போது சம்பளம் 5ஆயிரம் ரூபாய் என்று சொல்லவும் சரோஜாதேவி அம்மா இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுக்கச் சொல்லுங்க என்றாராம்.

அப்போது தயாரிப்பாளர் கதாசிரியரிடம் படத்துல எம்ஜிஆருக்கு ஜோடி யாக நடிக்கறதைக் கொஞ்சம் எடுத்துச் சொல்லப்பான்னு சொன்னாராம். அப்போது மா.லெட்சுமணனுக்கு கொஞ்சம் தர்மசங்கடமாகி விட்டது. உடனே சுதாரித்துக் கொண்டு சரோஜாதேவியிடம், 'ஒண்ணும் யோசிக்காம இந்தப் படத்துல நடிக்க ஒத்துக்கோங்கம்மா… இதுல நடிச்சா அடுத்து உங்க சம்பளம் 1 லட்ச ரூபாய்' என்றார்.

thirudatheஅதை சரோஜாதேவி அம்மா நம்பத் தயாராக இல்லை. ஆனா அந்தப் படம் ரிலீஸ் ஆன பிறகு அடுத்த படத்துக்கு சரோஜாதேவியின் சம்பளம் 1லட்சமாக உயர்ந்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

1967ல் ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி உள்பட பலர் நடித்த படம் திருடாதே. எஸ்எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்துள்ளார். ஏஎல்.சீனிவாசன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் என் அருகே நீ இருந்தால், அன்பாலே, ஆசை மச்சான், கண்ணும் கண்ணும், திருடாதே பாப்பா, மாமா மாமா, ஓ மிஸ்டர் பாலு ஆகிய பாடல்கள் உள்ளன.

Next Story