எம்ஜிஆர் நடித்து பாதியிலேயே நின்ன படம்! அதற்கு உயிரோட்டம் கொடுத்து அசத்திய கமல் - அந்தப் படமா?

by Rohini |
kamal
X

kamal

Actor Kamal: சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திடீரென நின்று போவதும் திரும்பவும் முழு மூச்சுடன் மீண்டும் அதே படத்தை எடுப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. அதற்கு பொருத்தமான உதாரணத்தை கூற வேண்டுமென்றால் வணங்கான் திரைப்படத்தை கூறலாம்.

சூர்யாவின் நடிப்பில் முதலில் உருவாகிய வணங்கான் சில பல பிரச்சினைகள் காரணமாக இப்போது அந்தப் படம் அருண் விஜய் நடிப்பில் தயாராகிக் கொண்டு வருகிறது. இதை போல ஒரு சம்பவம் எம்ஜிஆர், கமல் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.

இதையும் படிங்க:20 நாளா வீட்டுக்கே வராமல் ஓயாத வேலை… ரெஸ்டே இல்லாத மாரிமுத்து… என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர்களில் ஸ்ரீதர் மிகவும் முக்கியமானவர். காதலிக்க நேரமில்லை, நெஞ்சம் மறப்பதில்லை, போன்ற தரமான படங்களை எடுத்தவர்தான் ஸ்ரீதர். கமலை வைத்து நானும் ஒரு தொழிலாளி என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆனால் இதே பெயரில் ஸ்ரீதர் முதலில் எம்ஜிஆரை வைத்துதான் எடுத்தாராம். இரண்டு நாள்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க ஸ்ரீதருக்கு ஏதோ கதையில் சிறியதாக குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் எம்ஜிஆரை வைத்து எடுக்கிறோம். அதனால் கொஞ்சம் மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும் என ஸ்ரீதர் எம்ஜிஆரிடம் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயால் அப்செட்! இதுக்கு உடனே அஜித்தை கூப்பிடுங்க!… ரஜினியின் திடீர் ஆசை..

எம்ஜிஆரும் சரி.கொஞ்சம் நாள்கள் கழித்து இந்தப் படத்தை பண்ணலாம் என்று சொல்ல அதற்குள் எம்ஜிஆர் அரசியல் என்ற பொதுவாழ்க்கைக்குள் புகுந்துவிட்டாராம். அதன் பிறகு முதலில் சக்தி என்ற பெயரில் கமலை வைத்து ஸ்ரீதர் படம் பண்ணியிருக்கிறார். பிறகு அந்தப் படத்தின் தலைப்பை புதிய சூரியோதையம் என்று மாற்றியிருக்கிறார்.

ஆனால் அந்த காலகட்டத்தில் திமுக தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்ததால் இந்த பெயருக்கு பெரும் சர்ச்சை ஏற்படும் என்று கருதியே ‘நானும் தொழிலாளி’ என்று எம்ஜிஆர் பட டைட்டிலை வைத்தாராம் ஸ்ரீதர்.

இதையும் படிங்க: மார்க் ஆண்டனிக்கு தடைய போடு.. விஷாலின் ஆசையில் மண்ணை போடு… என்னங்க இப்டி ஆச்சு?!

கமலின் எத்தனையோ படங்களை கொண்டாடிக் கொண்டிருக்கும் நமக்கு இந்தப் படம் வந்தது பற்றியே தெரியாது. ஆனால் அந்த நேரத்தில் நானும் தொழிலாளி படம் ரிலீஸாகி மக்களின் வரவேற்பை அதிகளவில் பெற்றதாம்.

Next Story