விஜயால் அப்செட்! இதுக்கு உடனே அஜித்தை கூப்பிடுங்க!… ரஜினியின் திடீர் ஆசை..
Rajini Wish: ரஜினிகாந்த் ஜெய்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய படத்தின் வெற்றிக்கு இனி இந்த விஷயத்தினை கண்டிப்பாக ஃபாலோ செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்து இருக்கிறாராம். அந்த வகையில் தற்போது அஜித்திடமும் அதை எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
தர்பார், காலா உள்ளிட்ட படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக சிக்கலை பெரிதாக சந்திக்கவில்லை. அதே நேரத்தில் பெரிய அளவில் வசூலும் பெறவில்லை. இதை தொடர்ந்து வெளியான அண்ணாத்த படத்தில் அவருக்கு மிகப்பெரிய இடியாக விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படிங்க: நூடுல்ஸ்க்கு பதிலாக இத்துப்போன இடியாப்பம்னு வச்சிருக்கலாம்!.. இப்படியா இம்சை பண்ணுவீங்க பாஸ்!..
அதே நேரத்தில் பீஸ்ட் படத்தால் பிரச்னைகளை சந்தித்து ஒரு வெற்றிக்காக ஏங்கி நின்ற நெல்சனும் ஜெய்லர் படத்தில் இணைந்தனர். படம் வெற்றி பெறுமா என சந்தேகம் இருந்த நிலையில் கெத்தா, மாஸா தன்னுடைய இடத்தினை ரஜினிகாந்த் உறுதி செய்து கொண்டு இருக்கிறார்.
அதிலும் ஜெய்லர் பட வெற்றிக்கு முக்கிய காரணமே மல்டி ஸ்டார் கூட்டணியில் அமைந்தது தான். மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், கன்னடாவில் இருந்து சிவராஜ்குமார், இந்தியில் இருந்து டைகர் ஷெராப் ஆகியோர் ரஜினியுடன் நடித்து இருந்தனர்.
இதையும் படிங்க: மார்க் ஆண்டனிக்கு தடைய போடு.. விஷாலின் ஆசையில் மண்ணை போடு… என்னங்க இப்டி ஆச்சு?!
இதே பார்முலாவை தன்னுடைய அடுத்த படத்திலும் ரஜினி கையில் எடுத்து இருக்கிறார். அதன்படி தா.சே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித்தை தன்னுடன் நடிக்க வைக்க ரஜினி விரும்புகிறாராம்.
இதற்கு அஜித் என்ன சொல்லுவார் என்பது சந்தேகம் தான் என்றாலும் ரஜினி மீது அவருக்கு ஏற்கனவே பெரிய மதிப்பு என்பதால் ஒப்புக்கொள்ள கூட வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சையில் விஜயுடன் மோதிக்கொண்டு இருக்கும் நிலையில் அவரின் போட்டி நாயகனான அஜித்தை தேர்ந்தெடுத்து இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms