எம்.ஜி.ஆரே ஆசையாக கேட்டு வாங்கிய அந்த பரிசு..! இதுக்கா இவ்வளவு? சண்டைக்கு நின்ற தயாரிப்பாளர்..!

Published on: October 18, 2023
---Advertisement---

MGR: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருந்து பின்னர் தமிழக முதல்வராக மாறியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு கோடிக்கணக்கான பரிசுகள் நாள்தோறும் கிடைக்கும். அதில் பல விலை மதிப்பற்றதாக கூட இருக்கும். ஆனால் அவர் ஆசைப்பட்ட கேட்ட ஒரே பரிசு பொருள் இருக்கிறதாம். அதுகுறித்த ஆச்சரிய தகவல்கள் தான் வெளியாகி இருக்கிறது.

ஏவிஎம், எஸ்.எஸ்.வாசன் ஆகியோருக்கு முன்னரே கோலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் திருச்சி சௌந்தர்ராஜன். அவர் 25 வருடங்களாக சினிமாவில் படங்களை தயாரித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்தாராம்.

இதையும் படிங்க: ப்ப்பா!. குட்ட கவுன்ல சும்மா செம தக்காளி!. வாலிப பசங்க மனச கெடுக்கும் விஜே பார்வதி….

25 வருடங்களாக தன் படத்தில் நடித்த பணியாற்றிய எல்லாருக்குமே தேடி போய் ஒரு விலையுயர்ந்த பேனாவை பரிசாக கொடுக்க முடிவெடுத்து இருக்கிறார். அதன்படி பலருக்கும் பேனா கொடுக்கப்பட்டு வந்தது. இப்படி இருக்க அவரின் காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர் எம்.நடேசன்.

இவர் பின்னாட்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்தவர். பின்னர் எம்.ஜி.ஆரை வைத்து என் கடமை என்ற படத்தினை தயாரித்து இயக்கியவரும் இவர் தான். அப்படி வளர்ந்த நடேசனுக்கு கொடுக்க சவுந்தராஜனின் மகள் அவரை காண சென்று இருக்கிறார்.

ஆனால் அந்த நேரத்தில் உடல்நலம் குறைந்த எம்.ஜி.ஆர் படுக்கையில் இருந்தாராம். அவரிடம் சென்ற சவுந்தராஜனின் மகள் எங்க பட நிறுவனம் தொடங்கி 25வது ஆண்டை கொண்டாடும் விதமாக பேனா கொடுக்க விரும்பினார். உங்களுக்கு ஒரு பேனா எடுத்து வந்து இருக்கிறேன் என்றாராம்.

இதையும் படிங்க: லியோ படுத்திய பாடு!. பெத்த புள்ளையையே பயம்காட்டிய சாண்டி மாஸ்டர்!..

இதை அருகில் இருந்தே கேட்டுக்கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் எனக்கு பேனா இல்லையா எனக் கேட்டு இருக்கிறார். உடனே அவரோ நீங்க எங்க அப்பாக்கிட்ட வேலை செஞ்சிருக்கீங்களா எனக் கேட்டாராம். அதற்கு எம்.ஜி.ஆர் ஏன் வேலை செய்யல? உங்க அப்பா தயாரித்த பைத்தியகாரன் படத்தில் நடித்து இருப்பதாக கூறினாராம். 

அதை தன்னுடைய தந்தையிடம் சொல்ல அவர் செம மகிழ்ச்சியில் அடுத்த நாளே புதிய பேனாவுடன் வந்து எம்.ஜி.ஆருக்கு பரிசு கொடுத்து மகிழ்ந்தாராம். அதுதான் எம்.ஜி.ஆர் வாழ்க்கையிலேயே கேட்டு வாங்கியே ஒரே பரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.