எம்.ஜி.ஆருக்கு பதில் டூப் நடிகரை வைத்து படமெடுத்த இயக்குனர்!.. அட அந்த படமா?!...

Actor mgr: நாடகங்களில் பல வருடங்கள் நடித்து பின் சினிமாவில் நுழைந்தவர் எம்.ஜி.ஆர். சதிலீலாவதி என்கிற படத்தில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. சுமார் 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக மாறினார். நாடோடி மன்னன் திரைப்படத்தில் வெற்றி எம்.ஜி.ஆரை சூப்பர்ஸ்டாராக மாற்றியது.
ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பதே சண்டை காட்சிகள்தான். குதிரை ஓட்டுவது, கத்தி சண்டை போடுவது, வாள் சண்டை போடுவது, மல்யுத்தம் என பல வகையான சண்டை காட்சிகளிலும் எம்.ஜி.ஆர் அசத்தினார். பெரும்பாலும் ஏழை மக்களுக்காக போராடும் கதபாத்திரங்களிலேயே அதிகம் நடித்தார்.
இதையும் படிங்க: சரோஜாதேவியை கழட்டிவிட முடிவு செய்த எம்.ஜி.ஆர்!.. பின்னணியில் இருந்த காரணம் அதுதான்!…
ஒருகட்டத்தில் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாகவும் எம்.ஜி.ஆர் மாறினார். அவர் என்ன நினைக்கிறாரோ அதுதான் நடக்கும் என்கிற நிலையும் உருவானது. ஆனால், அவர் ஹீரோவாக வளர்ந்த நேரத்தில் பல அவமானங்களை சந்தித்திருக்கிறார். 50,60களில் அதிக திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ்.
இந்த நிறுவனம் தயாரித்த மந்திரகுமாரி, சர்வாதிகாரி ஆகிய வெற்றிப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் அடுத்து அந்நிறுவனம் தயாரித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் நடித்தார். இந்த படத்தை டி.ஆர்.சுந்தரம் இயக்கினார். படப்பிடிப்பு முடிந்து எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய சில காட்சிகள் மட்டும் பாக்கி இருந்தது. படப்பிடிப்புக்கு தேதியும் குறிக்கப்பட்டது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படமா?!.. சிவாஜி படமா?!.. ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பு!.. தடுமாறிய சிவக்குமார்!..
ஆனால், எம்.ஜி.ஆரால் படப்பிடிப்புக்கு வரமுடியவில்லை. 3 நாட்கள் கழித்து ஸ்டுடியோவுக்கு வந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், படப்பிடிப்பு நடக்கும் அறிகுறியே தெரியவில்லை. இயக்குனர் சுந்தரத்தின் முன்பு போய் நின்றார். எம்.ஜி.ஆரை பார்த்த சுந்தரம் ‘என்ன ராமச்சந்திரன்.. ஷூட்டிங் முடிஞ்சிடுச்சி.. படத்த பாத்துட்டு போங்க’ என்றார். எம்.ஜி.ஆரும் படத்தை பார்த்தார்.
எம்.ஜி.ஆருக்கு பதிலாக ஒரு டூப் நடிகை போட்டு காட்சிகளை எடுத்திருந்தார் டி.ஆர்.சுந்தரம். அதை கண்டுபிடிக்கமுடியாதபடி கச்சிதமாக எடுத்திருந்தார் சுந்தரம். படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த எம்.ஜி.ஆர் மனக்கசப்போடு அங்கிருந்து வெளியேறினார். அதன்பின் அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பதுதான் சினிமா வரலாறு.
இதையும் படிங்க: வாய்ப்பை தட்டி பறித்த நடிகர்.. ஆனாலும் நடிப்பை பார்த்து மிரண்டு போய் எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை..