எம்ஜிஆர் சொன்ன வார்த்தை.. கோபத்தில் வெளியேறிய சௌகார்!.. துவம்சம் செய்த ஜெயலலிதா..
தமிழ் சினிமாவில் ஏற்கெனவே சௌகார் ஜானகிக்கும் ஜெயலலிதாவிற்கும் ஒரு சிலப் பிரச்சினைகள் இருந்து வந்தது அனைவருக்கும் தெரியும். ‘ஒளிவிளக்கு’ படத்தில் சௌகார் ஜானிகியும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்திருப்பர். அதனால் அந்தப் படத்தில் யார் பெயரை முதலில் போடுவது என்பது மாதிரியான பிரச்சினைகள் எழுந்தன.
சௌகார் அவர் பெயரை முதலில் போடச் சொல்ல ஜெயலலிதா எம்ஜிஆருக்கு பின்னாடி தன் பெயர் தான் முதலில் வர வேண்டும் என இவர் சொல்ல இப்படி சிறு சிறு பிரச்சினைகள் எழுந்த வண்ணம் இருந்தன. இது சினிமா உலகில் இருக்க இப்படி ஒரு பிரச்சினை பொதுமேடையிலும் அரங்கேறியிருக்கிறது.
சினிமாத்துறைக்காக சில்வர் ஜுப்ளி விழாவை நடத்த சேம்பரிலிருந்து ஏற்பாடு செய்திருக்கின்றனர் அந்த காலகட்டத்தின் போது. அந்த விழாவிற்கு நான்கு மாநில முதல்வர்கள், குடியரசு தலைவர் என விழாவை கோலாகலமாக நடத்த திட்டமிட்டிருந்தனராம். விழாவை தொகுத்து வழங்கும் பொறுப்பை சௌகாரிடம் கொடுத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பு!. திட்டவட்டமாக மறுத்த ஜெயலலிதா!. காரணம் இதுதானாம்!..
அப்போதைய முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர். அவரிடம் இருந்து சேம்பருக்கு போன் வர ‘விழாவை தொகுத்து வழங்கப் போவது யாரு’ என்று கேட்டாராம். இவர்கள் சௌகார் என சொன்னதும் ‘சரி முதல் பாதியை சௌகார் தொகுத்து வழங்கட்டும் , இரண்டாம் பாதியை ஜெயலலிதா தொகுத்து வழங்குவார்’ என்று சொல்லி போனை வைத்து விட்டாராம்.
இவர் சொல்லி வைத்தவுடன் நேராக ஜெயலலிதா உள்ளே வந்து விட்டாராம். அங்கு சௌகாரும் இருக்க விழா பொறுப்பாளரான ஆனந்தம் நிறுவனத்தின் நிறுவனர் எல்.சுரேஷ் சௌகாரிடம் ‘முதல் பாதியை நீங்களும் இரண்டாம் பாதியை ஜெயலலிதாவும் தொகுத்து வழங்க வேண்டுமாம், மேலிடத்தில் இருந்து உத்தரவு’ என்று சொல்லியிருக்கிறார்.
இதை கேட்டதும் கடுங்கோபத்தில் சௌகார் ‘முடியவே முடியாது, இதை நான் செய்யப் போறதும் இல்லை’ என்று மேடையில் இருந்து கிளம்பி விட்டாராம். உடனே ஜெயலலிதாவிடம் ‘முழுவதையும் உங்களால் பண்ண முடியுமா?’ என்று கேட்க அதற்கு ஜெயலலிதா ‘ஏன் முடியாது, கண்டிப்பாக செய்கிறேன்’ என்று மேடையில் அனைவரும் வந்ததும் விழா ஆரம்பித்ததில் இருந்து நான்கு மொழிகளில் சரளமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாராம் ஜெயலலிதா. ஆனால் அவரிடம் ஸ்கிரிப்ட் ஆங்கிலத்தில் தான் கொடுத்தார்களாம். அதை முழுவதுமாக மனதில் நிறுத்தி நான்கு மொழிகளிலும் பேசி வெற்றிகரமாக முடித்தாராம். இந்த சுவாரஸ்ய தகவலை எல்.சுரேஷ் ஒரு பேட்டியின் போது தெரிவித்தார்.