Cinema History
வாய்ப்பை தட்டி பறித்த நடிகர்.. ஆனாலும் நடிப்பை பார்த்து மிரண்டு போய் எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை..
Actor MGR: 1930 மற்றும் 40களில் நாடகங்களில் பல வருடங்கள் நடித்த பலரும் சினிமா பிரபலமானபோது அதில் நுழைய முயன்றனர். ஆனால், சினிமாவில் நுழைந்தாலும் உடனே முக்கிய வேடங்கள் கிடைக்காது. சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கிடைக்கும். பல படங்களில் நடித்தபின்னரே அழுத்தமான வேடங்கள் கிடைக்கும்.
எம்.ஜி.ஆர் கூட அப்படி வந்தவர்தான். சிவாஜி மட்டுமே இதில் விதிவிலக்கு. முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தார். எம்.ஜி.ஆர் 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு ராஜகுமாரி படத்தில் ஹீரோவாக மாறினார். அதேபோல், 50,60களில் பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராக கலக்கியவர் பாலையா.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கூட நடிச்சாலும் சிவாஜியை பாராட்டிய ஜெயலலிதா!.. அதுவும் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!…
இவர் முதலில் சேர ஆசைப்பட்டது சர்க்கஸில்தான். தூத்துக்குடியை சேர்ந்த இவரை சர்க்கஸில் சேர்த்துவிடுகிறேன் என ஒருவர் சொல்ல அவரை நம்பி சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு மதுரை வந்தார். இரவு நேரமாகிவிட்டதால் அவர்கள் இருவரும் ரயில் நிலையத்தில் படுத்து உறங்கினார்கள்.
காலையில் எழுந்து பார்த்தால் அங்கே நண்பரும் இல்லை. அந்த பணமும் இல்லை. சர்க்கஸ் நிறுவனங்கள் பாலையாவை சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே, நாடகம் பக்கம் சென்றார். பல வருடங்கள் நாடகங்களில் நடித்தார். அதன்பின் சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். காதலிக்க நேரமில்லை படத்தில் அவர் நடித்தது போல் நடிக்க இப்போதுவரை ஒரு நடிகர் கிடையாது. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த சித்ரா என்கிற படத்தில் பாலையா ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆட்சி கலைந்தபோது எம்.ஜி.ஆர் செய்து கொண்டிருந்த அந்த விஷயம்!. மிஸ்டர் கூல் இவர்தான் போல!..
எம்.ஜி.ஆர் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நேரத்தில் ‘மீரா’ என்கிற படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கல்கத்தாவில் நடக்க எம்.ஜி.ஆரும் ரயில் மூலம் அங்கு சென்றார். ஆனால், அங்கு பாலையா வந்ததால் எம்.ஜி.ஆருக்கு சொன்ன வாய்ப்பு அவருக்கு போனது. பாலையா நடிக்கவிருந்த ஒரு சின்ன வேடம் எம்.ஜி.ஆருக்கு வந்தது.
ஆனாலும், அந்த படத்தில் பாலையா நடித்தது போல கண்டிப்பாக என்னால் நடித்திருக்க முடியாது என பின்னாளில் எம்.ஜி.ஆர் தான் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்’ சுயசரிதையில் எழுதியிருந்தார். பாலையா போல ஒரு நடிகர் இனிமேல் பிறக்க வாய்ப்பில்லை என அவரின் காலத்திலேயே அவரை பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜெயலலிதா செய்ததை மறக்காத எம்.ஜி.ஆர்!.. அந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது அப்படித்தான்!..