தியேட்டரில் எம்.ஜி.ஆரை கண்டுகொள்ளாத ரசிகர்கள்!.. காலம் மாறி பின்னால் நடந்துதான் மேஜிக்!..

0
1293
mgr

ஏழு வயதிலேயே நாடகத்தில் நடிக்க துவங்கியவர் எம்.ஜி.ஆர். வறுமை காரணமாக நாடகத்திற்கு போனவர் இவர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் நடித்தார். அப்போது சினிமா பிரபலமாகி வந்தது. எனவே, அதில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால், சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே அவருக்கு கிடைத்தது.

ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. தனக்கான நேரம் வரும் என பல வருடங்கள் பொறுமையாக காத்திருந்தார். அந்த காலங்களில் பல அவமானங்களை சந்தித்தார். அப்போது ஹீரோவாக நடித்த நடிகர்களுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது. ஏனெனில் ஹீரோக்களை விட அவர் நன்றாக வாள் வீசி சண்டை போடுவார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மீது கடுப்பாகி ஃபிலிமை எரித்த தயாரிப்பாளர்!.. சிவாஜியை பலிகாடா ஆக்கி படமெடுத்த சம்பவம்…

இதனால் சண்டை காட்சிகளில் எம்.ஜி.ஆரை இயக்குனர் மூலம் பழிவாங்குவார்கள். இதையெல்லாம் தாண்டிதான் எம்.ஜி.ஆர் ஹீரோவாக உயர்ந்து சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாக மாறினார். 1936ம் வருடம் வெளியான திரைப்படம் இரு சகோதரர்கள். இந்த படத்தில் கே.பி.கேசவன் என்பவர் ஹீரோவாக நடித்திருந்தார். இவரை சுருக்கமாக கே.பி.கே என அழைப்பார்கள்.

இவரை ரசிகர்கள் இந்திய மேடைப்புலி எனவும் அழைத்தார்கள். அதேபடத்தில் சிறிய வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இந்த படம் வெளியானபோது படம் பார்ப்பதற்காக சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் கே.பி.கே எம்.ஜி.ஆருடன் சென்றிருந்தார். இடைவேளையின்போது கே.பி.கே-வை பார்த்துவிட்ட ரசிகர்கள் கூச்சலிட்டு பெரிய ஆரவாரம் செய்தனர். படம் முடிந்தபின் அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது எம்.ஜி.ஆரை யாரும் கண்டுகொள்ளவில்லை. எம்.ஜி.ஆர்தான் அவரை பத்திரமாக தியேட்டருக்கு வெளியே அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க: உலகம் சுற்றும் வாலிபன் படத்திலிருந்து ஜெயலலிதாவை தூக்கிய எம்.ஜி.ஆர்!. காரணம் என்ன தெரியுமா?…

காலம் ஓடியது. மர்மயோகி படம் பார்க்க எம்.ஜி.ஆர் அதே தியேட்டருக்கு சென்றிருந்தார். அவருடன் கே.பி.கே-வும் இருந்தார். இடைவேளையில் எம்.ஜி.ஆரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் பெரிய ஆரவாரம் செய்தனர். படம் முடிந்தபின் அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொள்ள எம்.ஜி.ஆரை கே.பி.கே பத்திரமாக வெளியே அழைத்து சென்றாராம். இந்த முறை கே.பி.கே-வை ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இப்படித்தான் சினிமா உலகில் முன்னேறி எல்லோருக்கும் பதிலடி கொடுத்தார் எம்.ஜி.ஆர். படிப்படியாக முன்னேறி பெரிய ஹீரோவாக மாறி புகழின் உச்சிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. முடியவே முடியாது என முரண்டு பிடித்த கவிஞர்… நடந்தது இதுதான்!..

google news