Connect with us

Cinema History

ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. முடியவே முடியாது என முரண்டு பிடித்த கவிஞர்… நடந்தது இதுதான்!..

MGR Song: எம்.ஜி.ஆர் ஆசையாக கேட்ட பாட்டை தன்னால் எழுதவே முடியாது என ஒரு கவிஞர் மறுத்த சம்பவமும் கோலிவுட் வட்டாரத்தில் நடந்து இருக்கிறது. எப்படி கடைசியில் அந்த பாட்டு வெளியானது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

சாதாரண நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை மாஸ் நாயகனாக மாற்றிய படம் மலைக்கள்ளன். கிட்டத்தட்ட ஒரு ராபின்ஹுட் கதை என்று தான் சொல்ல வேண்டும். ஆக்‌ஷன் படத்தில் நடித்து தான் தனக்கென ஒரு இடத்தினை பிடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 

இதையும் படிங்க: வாங்குனது 3 கொடுத்தது 1… அவசரப்பட்ட ஐசரி கணேஷ்… அல்வா போல் ஆட்டைய போட்ட சிம்பு..

கதை. திரைக்கதை நாமக்கல் ராமலிங்கம் எழுதினார். வசனம் எழுதியது மு.கருணாநிதி. படத்தைத் தயாரித்தது பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் சார்பில் ஸ்ரீராமுலு நாயுடு. இவர்தான் இப்படத்தைத் தயாரித்து இயக்கினார்.

நகைச்சுவை பாடல்கள் எழுதி கோலிவுட்டில் பிரபலமானவர் தான் கவிஞர் தஞ்சை ராமையா தாஸ்.  இவர் மலைக்கள்ளன் படத்துக்கு ஒரு பாடலின் பல்லவியை எழுதிவிட்டார். அடுத்து சரணம் எழுத தொடங்கிய போது இயக்குனர் ராமுலுவுடன் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. 

அதனால் சரணம் எழுதாமலே சென்னை கிளம்பி சென்று விட்டார். இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவே இல்லையாம். ஒருமுறை மலைக்கள்ளன் பட ஷூட்டிங் சமயத்தில் மேக்கப் ரூம் சென்ற போது அந்த சரணத்தினை ஒரு சிறுவன் பாடிக்கொண்டு இருக்கிறான்.

இதையும் படிங்க: அவரையே நீ அசிங்கமா பேசுறீயா?… மாரிமுத்தை வெளிய போ எனக் கத்திய ராஜ்கிரண்…

இதைக்கேட்ட எம்.ஜி.ஆர் பாட்டு நல்லா இருக்கே. யார் படத்துக்கு இந்த பாட்டு எனக் கேட்கிறார். அப்புறம் தான் ராமுலுவிற்கும், ராமையா தாஸுக்கும் நடந்த பிரச்னை குறித்து கூறப்படுகிறது. இதைக்கேட்ட எம்.ஜி.ஆர் உடனே அவர கூப்பிட்டு  வந்து முழு பாட்ட எழுத வையுங்க எனக் கூறுகிறார்.

ஆனால் சுப்பையா நாயுடு போய் கேட்டும் ராமுலு மாதிரி ஆளுக்கெல்லாம் தன்னால் எழுத முடியாது. எம்.ஜி.ஆர் சொல்லியும் நான் செய்யாமல் இருப்பதற்கு வேண்டும் என்றால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் எனக் கூறிவிட்டார். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அந்த பாட்டை விட மனமில்லை.

இந்த பிரச்னையை முடிக்க நினைத்த சுப்பையா கோவை அய்யாமுத்துவை போய் நேரில் பார்த்து சரணம் எழுதி கேட்டு இருக்கிறார். அவரும் மறுக்காமல் சரியாக எழுதிக்கொடுத்தாராம். அதன்பின்னர், வெளியாகி மாஸ் ஹிட் அடுத்த அந்த பாட்டு தான். எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… இன்று வரை ட்ரெண்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top