
Cinema News
அவரையே நீ அசிங்கமா பேசுறீயா?… மாரிமுத்தை வெளிய போ எனக் கத்திய ராஜ்கிரண்…
Marimuthu: சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு வாழ்க்கை கொடுத்த ராஜ்கிரண் ஒருமுறை கோபத்தில் அவரை தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி விட்டார். அதுகுறித்த பின்னணி தகவலும், சினிமாவிற்குள் கூட எப்படி ஒரு பாலிடிக்ஸ் விளையாடியது என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தவர் மாரிமுத்து. அவருக்கு முதல் பெரிய வரவேற்பு இல்லை. மிகப்பெரிய போராட்டத்தினையே சந்தித்து இருக்கிறார். ஆனால் வீட்டிற்கு போக விருப்பம் இல்லாமல் சென்னையிலே தங்க முடிவெடுத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: வாங்குனது 3 கொடுத்தது 1… அவசரப்பட்ட ஐசரி கணேஷ்… அல்வா போல் ஆட்டைய போட்ட சிம்பு..
ஆனால் செலவுக்கு என்ன செய்யலாம் என யோசிக்க வடபழனி ஹோட்டல்களில் பரிமாறும் பணிகளையும் செய்கிறார். அப்போது ஒருவர் மூலம் வைரமுத்து அறிமுகமாகிறார். மாரிமுத்துவின் கையெழுத்தினை பார்த்த அவர் உடனே தன்னுடைய உதவியாளராக சேர்த்து கொள்கிறார். பின்னர் அவருடன் இருந்தவருக்கு ராஜ்கிரணிடம் சேர வாய்ப்பு கிடைக்கிறது.
அவரின் அலுவலகத்தில் ஆபிஸ் பாய் வேலைகளை எல்லாம் செய்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது தன்னுடைய சகாக்களிடம் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். மணிரத்னம் படம் வெளியாகி அமோகமாக போய் கொண்டிருந்த சமயமாம்.
இதையும் படிங்க: கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் – சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்…
அதனால் ரகுமானை புகழ்ந்து பேசி இருக்கிறார். ராஜா வித்தகர் தான். ஆனால் அவருக்கு ரகுமானும் ஈடுகொடுக்கிறார் எனப் பேசி இருக்கிறார். இதனை பயன்படுத்திக் கொண்ட சிலர் ராஜ்கிரணிடம் இளையராஜாவை மாரிமுத்து தவறாக பேசியதாக வத்தி வைக்கின்றனர். இதைக் கேட்ட ராஜ்கிரணுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது.
தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இளையராஜாவை எப்படி நீ அசிங்கமாக பேசலாம் என கோபமாய் இங்கிருந்து வெளியே போ எனக் கத்திவிடுகிறார். மாரிமுத்து பேச்சு எடுபடாத காரணத்தால் அவரும் சத்தமில்லாமல் கிளம்பி சென்று விடுகிறார்.
சில வருடம் கழித்து மாரிமுத்துவின் மீது எந்த தவறும் இல்லை என்பதை ராஜ்கிரணிடம் அவரின் சகாக்கள் கூறுகின்றனர். உடனே அவரை சந்தித்து மனதார மன்னிப்பு கேட்கிறார். ஆனால் மாரிமுத்து தன்மையாக பரவால சார். இதெல்லாம் சினிமாவில் சாதாரணம் தான என்றாராம்.