உலகம் சுற்றும் வாலிபன் படத்திலிருந்து ஜெயலலிதாவை தூக்கிய எம்.ஜி.ஆர்!. காரணம் என்ன தெரியுமா?...

ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஜெயலலிதா. அடுத்த படமே எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார். எம்.ஜி.ஆருக்கு ஒரு நடிகை பிடித்துவிட்டால் அந்த நடிகையை தொடர்ந்து தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பார். அந்த நடிகையுடன் நடிக்கும் படங்கள் ஹிட் அடிப்பதும் முக்கிய காரணமாக இருந்தது.
அப்படி எம்.ஜி.ஆருடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் ஜெயலலிதா பிரபலமானார். எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடியாகவும் இருந்தார். ஒருபக்கம், சரோஜாதேவியுடனும் எம்.ஜி.ஆர் பல படங்களில் நடித்தார். ஆனால், ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் மட்டும் நடித்து வந்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மீது கடுப்பாகி ஃபிலிமை எரித்த தயாரிப்பாளர்!.. சிவாஜியை பலிகாடா ஆக்கி படமெடுத்த சம்பவம்…
சில பிரச்சனைகளால் ஜெயலலிதாவுடன் நடிப்பதை குறைக்க நினைத்தார் எம்.ஜி.ஆர் அப்போதுதான் சொந்த பணத்தை போட்டு உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்.ஜி.ஆர் துவங்கினார். இப்படம் ஜப்பான், மலேசியா, ஹாங்காக் உள்ளிட்ட சில நாடுகளில் எடுக்க எம்.ஜி.ஆர் திட்டமிட்டார். இப்படத்தில் ஜெயலலிதா கதாநாயகி என எம்.ஜி.ஆர் முடிவு செய்தார்.
அப்போது எம்.ஜி.ஆரின் வலது கையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர் தயாரிக்கும் படங்களின் வரவு செலவு கணக்குகளை அவர்தான் பார்த்துகொள்வார். இந்த படத்திற்காக அவரை வெளிநாடு அழைத்து செல்ல திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். ஆனால், நான் அங்குவரவில்லை. எனக்கு உடல் நிலை சரியில்லை’ என வீரப்பன் சில காரணங்களை சொன்னார்.
இதையும் படிங்க: ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. முடியவே முடியாது என முரண்டு பிடித்த கவிஞர்… நடந்தது இதுதான்!..
அங்கே நல்ல மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள். பார்த்து கொள்கிறார்கள். வரவு செலவு கணக்குகளை பார்க்க நீங்கள்தான் சரியான ஆள். கிளம்புங்கள் என எம்.ஜி.ஆர் சொல்ல வீரப்பனோ ‘நீங்கள் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லவில்லை. ஜெயலலிதாவுடன் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றவே வெளிநாடு போகிறீர்கள்’ என நவசக்தி பத்திரிக்கை எழுதியுள்ளது எனக்கூறி அந்த பத்திரிக்கையும் எம்.ஜி.ஆரிடம் காட்டினார்.
இப்போது என்ன செய்யலாம்? என எம்.ஜி.ஆர் கேட்கவே ‘இந்த படத்தில் ஜெயலலிதா வேண்டாம். மஞ்சுளாவை நடிக்க வைப்போம்’ என அவர் சொல்ல எம்.ஜி.ஆரும் அதை ஏற்றுக்கொண்டார். அதன்பின் ஜெயலலிதாவுக்கு பதில் அப்படத்தில் மஞ்சுளா நடித்தார். மேலும், சில கதாநாயகிகளும் இப்படத்தில் நடித்தனர்.
இதனால் கோபமடைந்த ஜெயலலிதா இனிமேல் எம்.ஜி.ஆருடன் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்து சிவாஜி, ஜெய் சங்கர், முத்துராமன் உள்ளிட்ட பலருடனும் நடிக்க துவங்கி எம்.ஜி.ஆரை கோபப்படுத்தியது தனிக்கதை..
இதையும் படிங்க: நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..