Connect with us
mgr sivaji

Cinema History

சிவாஜியுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்!.. எம்.ஜி.ஆர் சொன்ன காரணத்தை பாருங்க!…

Mgr sivaji: 50,60களில் தமிழ் திரையுலகில் இரு பெரும் ஆளுமைகளாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் – சிவாஜி. இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே சிறு வயது முதல் நாடகங்களில் நடித்துவிட்டு பின்னர் சினிமாவுக்கு வந்தவர்கள். எம்.ஜி.ஆர் 30 வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு பின்னர் சினிமாவில் நுழைந்தார்.

ஆனால், எம்.ஜி.ஆரோ 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். ஆனால், சிவாஜியோ பராசக்தி என்கிற முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தார். எம்.ஜி.ஆர் ஆக்‌ஷன் கதைகளில் நடித்தால் சிவாஜியோ நல்ல கதையம்சம் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் உள்ள கதைகளில் நடித்தார்.

இதையும் படிங்க: என் வீட்டு பொம்பளங்களையும் நீ கெடுத்து வச்சிருக்க!.. பாக்கியராஜிடம் கோபப்பட்ட சிவாஜி!..

இருவருக்கும் தனித்தனியாக ரசிகர்கள் உருவானார்கள். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சிவாஜியை விமர்சிப்பார்கள். அதேபோல், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சிவாஜியை விமர்சிப்பார்கள். எப்படி ரஜினி – கமல், இப்போது விஜய் – அஜித் இருக்கிறார்களோ அப்போதும் அப்படித்தான். சினிமாவில் போட்டியே தவிர நிஜவாழ்வில் இருவரும் அண்ணன் – தம்பியாகவே பழகினார்கள்.

இருவரும் வளரும்போது ‘கூண்டுக்கிளி’ என்கிற படத்தில் மட்டும் இருவரும் இணைந்து நடித்தார்கள். அதன்பின் இருவரும் வெவ்வேறு பாதையில் சென்றுவிட்டனர். அதன்பின் எப்போதும் அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை. பல நடிகர்களுடன் இருவரும் இணைந்து நடித்தாலும் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவே இல்லை.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஹெலிகாப்டரை காட்டிய படம்! நூலிழையில் உயிர்தப்பிய சிவாஜி

ஒருமுறை இதுபற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது ‘ என் பாணி வேறு. சிவாஜியின் பாணி வேறு.. இருவரும் இணைந்து நடிப்பது போல கதை அமையாது. அப்படியே அமைந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் குழப்பம் வரும்.

அப்படியே படத்தை முடித்து வெளியிட்டாலும் தியேட்டரில் நான் வரும் காட்சிகளுக்கு என் ரசிகர்கள் கை தட்டுவார்கள். சிவாஜி வரும் காட்சிக்கு அவரின் ரசிகர்கள் கை தட்டுவார்கள். இதுவே தியேட்டரில் களேபரத்தை உருவாக்கி விடும். எனவே, நானும், அவரும் இணைந்து நடிப்பது என்பது சாத்தியம் இல்லை’ என கூறியிருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top