விருது வாங்க போக கார் கூட இல்லாத நடிகை!.. எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்!...

MGR
சினிமாவில் ஒருவர் உச்சத்தில் இருக்கும் வரைதான் மதிப்பார்கள். அவர் கீழே போய்விட்டால் விசாரிக்க கூட மாட்டார்கள். சினிமாவில் பணத்தில் புரண்டு தங்கத்தட்டில் சாப்பிட்ட பலர் பின்னாளில் சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்பட்டதை சினிமா உலகம் பார்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் முதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பி.டி.ராஜலட்சுமி. அந்த காலத்தில் ‘சினிமாவின் ராணி’ என இவரை அழைத்தார்கள். முதல் நடிகை மட்டுமல்ல. தமிழ் திரையுலகின் முதல் இயக்குனர்.. முதல் தயாரிப்பாளர் என பல பெருமைகளை கொண்டவர் இவர்.
இதையும் படிங்க: ஜெயலலிதாதான் ஃபர்ஸ்ட்!.. எம்.ஜி.ஆர் செய்த வேலை!. கோபத்தில் வெளியேறிய நடிகை!…
1929ம் வருடம் வெளிவந்த கோவலன், 1930ல் வெளிவந்த உஷா சுந்தரி மற்றும் ராஜேஸ்வரி, 31ம் வருடம் வெளிவந்த காளிதாஸ், 32ல் வெளிவந்த ராமாயணம் என பல படங்களிலிலும் நடித்தார். மேலும் வள்ளி திருமணம், ஹரிச்சந்திரா, லலித்தாங்கி, குலேபகாவலி என பல படங்களிலும் நடித்தார். கடைசியாக இவரின் நடிப்பில் இதய கீதம் என்கிற படம் 1950ம் வருடம் வெளியானது.
அதன்பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை.
இதில், மிஸ் கமலா, நந்தகுமார் ஆகிய படங்களை ராஜலட்சுமி இயக்கி நடித்திருந்தார். தமிழில் மட்டுமல்ல. தெலுங்கு சினிமாவிலும் இவர்தான் முதல் கதாநாயகி. நடிப்பு, தயாரிபு, இயக்கம் மட்டுமின்றி இவர் ஒரு நல்ல பாடகியும் கூட. அதோடு கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டிருந்தார்.
ரஜினியை வச்சி படம் எடுக்குறியா?!. தயாரிப்பாளரிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!..
அதனால்தான் இவரை சினிமா ராணி என திரையுலகம் அழைத்தது. சினிமாவை தாண்டி சமூக பிரச்சனைகளுக்கும் அவர் குரல் கொடுத்தார். மேலும், திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அவர் தயாரித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் பொருளாதார அளவில் வீழ்ச்சி அடைந்தார்.
1961ம் வருடம் அவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது. இந்த விருதை சென்று வாங்க கூட அவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. இதைக் கேள்விப்பட்டு வருத்தமடைந்த எம்.ஜி.ஆர், அவரை தொடர்பு கொண்டு ‘நீங்கள் விருது வாங்க செல்வது முதல், விருதை வாங்கிவிட்டு வீட்டுக்கு வரும் வரை என்னுடைய காரை பயன்படுத்திகொள்ளலாம்’ என சொல்லி அவரின் காரை அனுப்பி வைத்தார்.