எம்ஜிஆர், இளையராஜா, எஸ்பிபி… இவங்களுக்கு பேரு வாங்கிக் கொடுத்த கவிஞர் இவரா?

mgr spb ilaiyaraja
திரைப்படப் பாடலாசிரியர் ஆகி பொன்விழாவைக் கொண்டாடும் கவிஞர் முத்துலிங்கம். இன்று இயக்குனர் பாக்கியராஜ் தலைமையில் சென்னையில் இந்தக் கொண்டாட்டமான விழா நடைபெற உள்ளது. இளையராஜாவுடன் நெருக்கமானவர். எம்ஜிஆருக்குப் பாடல் எழுதியவர். ரொம்ப யதார்த்தமானவர். எளிமையானவர். எம்ஜிஆருக்கு அரசவை கவிஞர் ஆக இருந்தார். அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர்.
1500 பாடல்கள் எழுதியுள்ளார். எஸ்பிபியின் நினைவலைகளை மீட்டும் வகையில் ஒரு பாடல் திரும்ப திரும்ப ஒலிபரப்பாக்கினர். அது இவர் எழுதிய 'சங்கீத மேகம்' பாடல்தான். அதே போல 'மாஞ்சோலை கிளிதானோ' பாடலும் இவர் எழுதியதில் சூப்பர்ஹிட். எம்ஜிஆருக்கு மதுரை மீட்ட சுந்தரபாண்டியனில் தாயகத்தின் சுதந்திரமே என்ற பாடலை இவர்தான் எழுதினார்.
அதே போல 'இது நாட்டைக் காக்கும் கை' என்ற பாடலை எழுதி அவரது கொள்கைகளை வெளிப்படுத்தினார். ஆனால் இந்தப் பாட்டை காங்கிரஸ்காரங்க அவங்க பாட்டாக எடுத்துக்கிட்டாங்க. அவஙகளோடது கை சின்னம் என்பதால் இப்படி ஆகிவிட்டது. கந்தனுக்கு மாலையிட்டால் என்ற ஒரு பாடலை எம்ஜிஆருக்காக முதன் முதலாக எழுதியுள்ளார் கவிஞர் முத்துலிங்கம். இளையராஜா போட்ட முதல் மெட்டுக்கு பாட்டு எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம்தான்.
அப்போது பொண்ணுக்குத் தங்க மனசு என்ற படத்துக்காக இளையராஜாவின் குருநாதர் ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்தார். இந்தப் படத்தில் இளையராஜா தான் ஒரு பாடலுக்கு மெட்டு போட்டார். அதற்கு முத்துலிங்கம் எழுதிய பாடல்தான் 'தஞ்சாவூர் சீமையிலே' என்ற அந்தப் பாடலில் பல நதிகளைப் பற்றி எழுதியிருந்தார் கவிஞர். உன்னால் முடியும் தம்பி படத்தில் 'இதழில் கதை எழுதும்' இவர் எழுதிய பாடல்தான். அதே போல மௌனகீதங்கள் 'டாடி டாடி ஓ மை டாடி' என்ற பாடலை இவர்தான் எழுதினார். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.