Cinema History
10 வயதிலேயே சொந்த வசனத்தை பேசிய எம்.ஜி.ஆர்!.. நாடகத்தில் மாஸ் காட்டிய பொன்மன செம்மல்…
Actor mgr: எம்.ஜி.ஆரை எல்லோருக்கும் வாள் சண்டை போட்ட நடிகர், வசீகர முகம் உள்ளவர்.. சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர், பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.. தமிழகத்தின் முதல்வாக இருந்தவர்.. எல்லோருக்கும் உதவியவர்… பலரையும் வாழ வைத்தவர்… தம்மால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்தவர் என்பது மட்டும்தான் தெரியும்.
ஆனால், ராஜகுமாரி என்கிற படத்தில் அறிமுகமாவதற்கு முன் 40 வருடங்கள் அவர் தன் வாழ்வில் பட்ட பாடு, அவமானங்கள், ஒரு இடத்தை பிடிக்க அவர் வாழ்வில் சந்தித்த போராட்டங்கள், போட்டி பொறாமைகளை தாக்குபிடித்த அவரின் சகிப்பு தன்மைகள் பற்றி பலருக்கும் தெரியாது.
இதையும் படிங்க: 18 நாட்களில் முடிக்கப்பட்ட படம்… எம்.ஜி.ஆர் ராசியால் 100 நாட்கள் ஓடிய அதிசயம்.. என்ன படம் தெரியுமா?
வீட்டில் வறுமை வாடியதால் உணவுக்கும் உடைக்கும் கூட வழியில்லை. அதனால், அவரின் அம்மா சத்யா தனது மகன்கள் ராமச்சந்திரன் மற்றும் சக்கரபாணி இருவரையும் 7 வயதிலேயே நாடகத்திற்கு அனுப்பினார். ஏனெனில், நாடகத்தில் இருந்தால் நல்ல உடை கிடைக்கும், 3 வேளையும் உணவு கிடைக்கும். இதற்காகவே அம்மாவை பிரிந்து சில நூறு கிலோ மீட்டர் தூரம் தள்ளி, தங்கியிருந்து நாடகத்தில் நடித்து வந்தார் எம்.ஜி.ஆர்.
கிட்டத்தட்ட 30 வருடங்கள் அவர் நாடகங்களில் நடித்தார். 37 வயதில்தான் சினிமாவில் நுழைந்தார். அதற்கு பின்னாலும் பல போராட்டங்கள் இருந்தது. 10 வருடங்கள் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில்தான் நடித்தார். 1947ம் வருடம் வெளியான ராஜகுமாரி படத்தில்தான் எம்.ஜி.ஆர் ஹீரோவாக அறிமுமானார். இந்த படத்திற்கு வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதி.
இதையும் படிங்க: படத்தின் தலைப்பை கேட்டு அசந்துபோய் பரிசு கொடுத்த எம்.ஜி.ஆர்.. அட அந்த சூப்பர் ஹிட் படமா!..
எம்.ஜி.ஆர் படங்களில் அவர் பேசிய வசனங்கள் மிகவும் பிரபலம். வசனங்கள் மற்றும் வாள் சண்டை மூலம்தான் ரசிகர்களிடம் பிரபலமானார். எம்.ஜி.ஆர் பேசும் பஞ்ச் வசனங்கள் தியேட்டரில் விசில் பறக்கும். ஆனால், 10 வயதிலேயே சொந்த வசனம் பேசி ரசிகர்களிடம் அவர் கைத்தட்டல் வாங்கிய சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.
நல்லதங்காள் என்கிற நாடகத்தில் நடித்த போது தனது குழந்தைகள் எல்லாவற்றையும் நல்லதங்காள் கிணற்றில் தள்ளிவிடுவது போல் ஒரு காட்சி. எம்.ஜி.ஆர் கடைசி குழந்தை. ‘அம்மா என்னை விட்டுவிடம்மா’ என வசனத்தை மட்டுமே எம்.ஜி.ஆர் பேசவேண்டும். அதை பேசிய எம்.ஜி.ஆர் அடுத்து ‘அந்த கொடுமைக்காரியை பழிவாங்காவாவது நான் இருக்க வேண்டும். என்னை விட்டு விடம்மா’ என பேசியுள்ளார். இதைகேட்ட அரங்கில் கைத்தடலும், விசில் சத்தம் விண்ணை பிளந்தது.
நாடகம் முடிந்த பின் நாடக வாத்தியார் அவரை அழைத்து தலையில் கொட்டி ‘இதுபோன்ற சரித்திர நாடகங்களில் வாத்தியார் சொல்லி கொடுப்பதை மட்டுமே பேச வேண்டும். நீயாக சொந்த வசனம் பேசக்கூடாது’ என கூறினாராம்.
இதையும் படிங்க: ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய எம்.ஜி.ஆர்!. கோடிகளை குவித்த எவர்கிரீன் சூப்பர் ஹிட் படம்!..