என்.எஸ்.கே முதல் சோ வரை....எம்.ஜி.ஆர் படங்களில் இதுவரை நடிக்காத ஒரே நகைச்சுவை நடிகர்...!

by Rohini |
mgr_main_cine
X

தமிழ் சினிமாவின் ஆதி முதலே நகைச்சுவையின் ஆதிக்கம் இருந்து வந்திருக்கிறது. சினிமா என்ற ஒன்று எப்பொழுது தோன்றியதோ அன்றிலிருந்தே நகைச்சுவைக்கு என்று ஒரு சகாப்தம் எழுதப்பட்டு விட்டது. இப்ப உள்ள தலைமுறைகள் அறியாத பல நகைச்சுவை ஜாம்பவான்கள் எல்லாம் சினிமாவை ஆண்டு விட்டனர்.

mgr1_cine

என்.எஸ்.கே, விகே, ராமசாமி, தங்கவேல், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ போன்றோர் கலையுலக ஜாம்பவான்களாகவே நகைச்சுவையில் திகழ்ந்தனர். இவர்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்களிலும் சிவாஜி படங்களிலும் சேர்ந்து நடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்கள் : பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏஆர் ரகுமானுக்கு வைத்த செக்…! பாடலாசிரியரை சீண்டியதால் ஏற்பட்ட வினை…

mgr2_cine

முக்கியமாக தன்னுடைய எல்லா படங்களிலும் தனக்கு இணையாக நகைச்சுவை நடிகர்களுக்கும் பங்கு இருக்க வேண்டும் என விரும்புவர் எம்.ஜி.ஆர். அதுமட்டுமில்லாமல் தன்னுடனே ஒரு நகைச்சுவை நடிகர் பட்டாளத்தையே வைத்திருப்பார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நாகேஷ், தேங்காய் சீனிவாசன்.

mgr3_cine

இவர்களை தான் அடிக்கடி எம்.ஜி.ஆர் படங்களில் காணமுடியும். இவர்களை தவிர முக்கியமான ஒரு நகைச்சுவை நடிகர் யாரென்றால் வெண்ணிறாடை மூர்த்தி. இவரும் அநேக படங்களில் நடித்து பெரும் புகழை பெற்றவர். ஆனால் இவர் ஒருவர் தான் எம்.ஜி.ஆர் படங்களில் இதுவரை நடித்ததே இல்லையாம்.

Next Story