பறந்து சென்று உதவிய எம்.ஜி.ஆர்.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன தேங்காய் சீனிவாசன்.. நடந்தது இதுதான்!...

by Sathish G |   ( Updated:2023-01-13 02:58:22  )
THENGAI SRIVASAN -MGR
X

THENGAI SRIVASAN -MGR

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். 1917-ம் ஆண்டு இலங்கையில் பிறந்தார். இன்றைய அரசியல்வாதிகள் திரைத்துறையினர் கூட தங்களது மேடை பேச்சுகளில் எம்.ஜி.ஆர். பற்றி பேசாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம். இவருடன் நடித்த தேங்காய் சீனிவாசன் பழம்பெறும் நகைச்சுவை நடிகராவர்.

தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார். பின்னர் இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்தார். இவர் கே. கண்ணனின் கல் மணம் நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார். அதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த கே. ஏ. தங்கவேலு, இவரை தேங்காய் ஸ்ரீநிவாசன் என்றே எல்லாரும் அழைக்க வேண்டும் என்று கூறினார்; அவ்வாறே அழைக்கப்பட்டார்.

mgr

mgr

ஒருமுறை எம்.ஜி.ஆர் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டிற்கு வந்து உறங்கச் சென்றார். பின்பு காலை 5 மணி அளவில் தொலைபேசியில் அழைப்பு ஒன்று வருகிறது அதன் மறு முனையில் படபடப்பு மிகுந்து தேங்காய் சீனிவாசன் பேச தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை அவரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்க தாங்கள் உத விட வேண்டும் என்றார். இதை கேட்டவுடன் மக்கள் திலகம் எம்ஜிஆர் பட பட வென காரை தானே வேகமாக ஓட்டிக்கொண்டு தேங்காய் சீனிவாசன் வீட்டிற்கு விரைந்தார்.

வேகமாக தேங்காய் சீனிவாசனின் வீட்டிற்கு சென்ற எம்.ஜி.ஆர் அவரை பார்த்து திகைத்தார். அவர் முடக்குவாதத்தால் முடங்கி இருந்தார். உடனே எம்.ஜி.ஆர் அவரது தந்தையை தூக்கிக் கொண்டு காரில் அமர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்பு படப்பிடிப்பு முடிந்தவுடன் மருத்துவமனைக்கு விரைந்த தேங்காய் சீனிவாசன்” நன்றி அண்ணே நன்றி அண்ணே” என்று கண்ணீர் மல்க நன்றி சொன்னார். அப்பொழுது புரட்சித் தலைவர் ”நன்றி சொல்லி என்னை அந்நியன் ஆக்கி விடாதே ”என்றார் . அப்போது எம்ஜிஆர் அதிக அளவு சம்பளம் பெரும் நடிகராக இருந்தார். இப்படி ஏராளமான உதவிகளை தன்னை சார்ந்தோர்க்கு செய்திருக்கிறார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: கமல் பார்த்து வியந்த சிவாஜியின் நடனம்!.. மெய்சிலிர்க்க வைத்த நடிகர்திலகம்!..

Next Story