எம்ஜிஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை முதல் படம் கைகொடுத்ததா? புட்டுக்கிச்சா?

mgr to sk
தமிழ்த்திரை உலகில் நடித்த ஹீரோக்களின் முதல் படங்கள் பார்த்தால் பெரும்பாலனவர்களுக்கு அது ஹிட் அடிக்கும். சிலருக்கு அது பிளாப் ஆகும். அதன்பிறகு பல படங்கள் வெற்றி, தோல்வியை மாறி மாறி சந்திக்கும். முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். ஆனால் நம்ம ஹீரோக்கள் விஷயத்தில் இது எப்படின்னு பார்க்கலாமா…
எம்ஜிஆர் நடித்த முதல் படம் சதிலீலாவதி. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சிவாஜி நடித்த முதல் படம் பராசக்தி. இது கலைஞரின் வசனத்தில் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. கமல் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. இது சூப்பர்ஹிட். அப்பவே தேசிய விருது வாங்கினார் கமல். அப்புறம் ஹீரோவாக நடித்த முதல் படம் கன்னியாகுமரி. இது சுமார் ரகம்தான். என்றாலும் இந்தப் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதைக் கமல் பெற்றார்.
ரஜினி நடித்த முதல் படம் அபூர்வராகங்கள் இது சூப்பர் ஹிட். அவர் ஹீரோவாக நடித்த படம் பைரவி. இது சுமார் ரகம். இதுல தான் சூப்பர்ஸ்டார் பட்டமே கிடைத்தது. தொடர்ந்து அதை இன்றுவரை தக்க வைத்து வருகிறார். விஜயகாந்த் நடித்த முதல் படம் இனிக்கும் இளமை இது பிளாப். ஆனால் தொடர்ந்து பல படங்கள் ஹிட் அடித்தன.
சத்யராஜ் நடித்த முதல் படம் ஆளப்பிறந்தவன். இது சுமார் ரகம் பிரபு நடித்த முதல் படம் சங்கிலி. இது ஹிட். கார்த்திக் நடித்த முதல் படம் அலைகள் ஓய்வதில்லை. இது சூப்பர் ஹிட். பாண்டியன் நடித்த முதல் படம் மண்வாசனை. இது சூப்பர்ஹிட்.

அதே போல திரைக்கதை மன்னன் பாக்கியராஜிக்கு புதிய வார்ப்புகள் ஹிட். ராமராஜனுக்கு நம்ம ஊரு நல்ல ஊரு ஹிட். மோகனுக்கு நெஞ்சத்தைக் கிள்ளாதே சூப்பர்ஹிட். பார்த்திபனுக்கு புதிய பாதை சூப்பர்ஹிட். பாண்டியராஜனுக்கு ஆண்பாவம் செமஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளி நடித்த முதல் படம் பூவிலங்கு. இது சூப்பர் ஹிட் அர்ஜூன் நடித்த முதல் படம் நன்றி. இது சுமார் ரகம். விஜய்க்கு நாளைய தீர்ப்பு நடித்த முதல் படம். இது பிளாப். அஜித்துக்கு அமராவதி நடித்த முதல் படம். இதுவும் பிளாப். சிவகார்த்திகேயனுக்கு முதல் படம் மெரினா. இது பிளாப்.
விஜய் சேதுபதிக்கு தென் மேற்குப் பருவக்காற்று. இது சூப்பர்ஹிட். சிம்பு ஹீரோவாக நடித்த முதல் படம் காதல் அழிவதில்லை. இது பிளாப். தனுஷ் நடித்த முதல் படம் துள்ளுவதோ இளமை. இது சூப்பர்ஹிட். பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடித்த முதல் படம் கும்கி. சக்கை போடு போட்டது. ஆனால் சமீபகாலமாக ஒரு படமும் ஹிட் அடிக்கவில்லை. விக்ரமுக்கு என் காதல் கண்மணி. இது பிளாப். ஆனால் அதன்பிறகு பல வெற்றிகளைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.