விமர்சனங்கள் குறித்து அப்பவே சொன்ன எம்ஜிஆர்… இப்பவும் அதுதானே நடக்குதே!

Published On: April 13, 2025
| Posted By : sankaran v
mgr

இன்று ஒரு படம் வெளியானால் ஒரு சானல் படம் தாறுமாறு ஹிட்டுன்னு சொல்லும். இன்னொரு சானல் படம் சரியான மொக்கைன்னு சொல்லும். இன்னொரு சானல் படத்தோட யதார்த்தம் அப்படி இப்படின்னு ரியலாலிட்டியைச் சொல்லி கொஞ்சம் தன்னோட பில்டப்பையும் கொடுக்கும். அந்த வகையில் ஒவ்வொருத்தரும் தங்களுக்குன்னு ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி வச்சிருப்பாங்க.

பொதுவாக நெகடிவ் கொடுத்தால் தான் நிறைய ரிவியூஸ் வரும்னு அதையே கொடுக்குற சானலும் இருக்கத்தான் செய்கிறது. இந்த சமூகவலைதள வருகைக்குப் பிறகு படம் பார்க்குற எல்லாருமே விமர்சனம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த வகையில் மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் பத்திரிகை விமர்சனங்களே வந்தன. அப்போது அதுகுறித்து எம்ஜிஆர் என்ன சொன்னாருன்னு பார்க்கலாமா…

எம்ஜிஆர் நடித்த காலத்தில் அவருடைய பார்வையில் விமர்சனங்கள் எப்படி இருந்தன என்றால் அது நடுநிலைத்தன்மையோடு இல்லை என்றே சொல்லலாம். பத்திரிகை விமர்சனஙகளைப் பொருத்தவரைக்கும் அது நடுநிலைமையோடு இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் என்னோட எண்ணம் என்கிறார் எம்ஜிஆர்.

mgrஎன்னுடைய படத்தையே எடுத்துக் கொண்டால் ஒரு பத்திரிகையிலே நான் அந்தக் காட்சியிலே சிறப்பாக நடித்து இருந்ததாகச் சொல்றாங்க. இன்னொரு பத்திரிகையில் நான் மோசமாக நடித்து இருப்பதாகச் சொல்கிறார்கள். 3வதாக இன்னொரு பத்திரிகையில நல்லாவும் இல்லை. மோசமாகவும் இல்லை. பரவாயில்லை ரகத்தில் எம்ஜிஆருடைய நடிப்பு அமைந்து இருந்ததாகச் சொல்கிறார்கள்.

இதுல எந்த விமர்சனத்தை நான் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து நடிப்பது? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. இப்படி எல்லாம் விமர்சனங்கள் ஏன் தாறுமாறா வருதுன்னா அதுக்கு முக்கிய காரணம் விமர்சகர்களுக்கு சரியான பார்வை இல்லை. அதே மாதிரி விமர்சனத்தை எப்படி எழுத வேண்டும் என்ற தேர்ச்சியும் அவர்களுக்கு இல்லை. அதன் காரணமாகத்தான் இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன என்று பத்திரிகை பேட்டி ஒன்றில் எம்ஜிஆர் பதிவு செய்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.