எம்ஜிஆரே எங்கிட்ட மன்னிப்பு கேட்டாரு… நடிகர் சொல்றதைக் கேளுங்க..! யாரப்பா அவரு?

mgr
தமிழ்சினிமா உலகில் எம்ஜிஆர் நடித்த படங்கள் எல்லாமே தனி முத்திரையைப் பதிக்கும். அவர் படத்தில் வந்தாலே போதும். ரசிகர்களுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடும். படங்களில் தத்துவ வசனங்களைக் கேட்டால் கூஸ்பம்ஸாகவே இருக்கும். அவருடைய பாடல்கள் எல்லாமே தேன் சொட்டும் ரகங்கள்தான்.
அந்த வகையில் 1966ல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி இணைந்து நடித்த மாபெரும் வெற்றிப்படம் அன்பே வா. இதில் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நவநாகரீக எம்ஜிஆரைப் பார்க்கலாம். எம்எஸ்வி.யின் இசையில் பாடல்கள் எல்லாமே அற்புதம். எம்ஜிஆரின் நடனமும் செம மாஸாக இருக்கும். இந்தப் படத்தின் லொகேஷன்கள் எல்லாமே அருமையாக இருக்கும்.
நடிகர் இளவரசு ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக இருந்து நடிகர் ஆனவர். இவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர். இவர் ஒளிப்பதிவில் உதவியாளராக பணியாற்றிய போது நடந்த சம்பவம் ஒன்றை இப்படி சொல்கிறார்.

ஒரு கைதியின் டைரி படப்பிடிப்புல இருக்கோம். எம்ஜிஆரு ஐயா அன்பே வா படப்பிடிப்பு எடுத்த லொகேஷன்ல நாங்க எடுத்துக்கிட்டு இருக்கோம். 20 வருஷம் கழிச்சி அந்த இடத்தைப் பார்க்க வர்றாரு. நான் ரெஃப்லெக்ட்டை பிடிச்சிக்கிட்டு இருக்கேன். 'சாரி உங்க வேலையை நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?'ன்னு கேட்குறார். யாரு எம்ஜிஆருங்க. எங்கிட்ட சாரி கேட்கணுமா? எனக்கு எவ்வளவு பெரிய பாடம்? நான் என்ன பெரிய கருவேப்பில்லை..? என்கிறார் நடிகர் இளவரசு.
பாஞ்சாலங்குறிச்சி, பெரிய தம்பி, இனியவளே, நினைத்தேன் வந்தாய், மனம் விரும்புதே உன்னை, வீர நடை ஆகிய படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசு ஒளிப்பதிவாளர் பி.கண்ணனிடம் ஆரம்பத்தில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். அப்படி பணிபுரிந்த படம் தான் ஒரு கைதியின் டைரி. இது 1985ல் வெளியானது. பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடித்த சூப்பர்ஹிட் படம்.
இவர் பாரதிராஜா இயக்கிய கடலோரக் கவிதைகள் படத்தில் தான் முதன் முதலாக சத்யராஜின் நண்பராக நடித்து சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பின்னாளில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தார். இவருக்கு புகழ் சேர்த்த படம் முத்துக்கு முத்தாக.