Cinema History
தெருவில் நின்ற சைக்கிளை எடுத்து சென்ற எம்.ஜி.ஆர்.. படப்பிடிப்பில் நடந்த களோபரம்…
நாடக அனுபவம்:
நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு போனவர் எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்துள்ளார். 37 வயதில்தான் எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்க துவங்கினார் எனக்கூறப்படுகிறது. பல வருடங்கள் போராடி, பல வாய்ப்புகள் கிடைக்காமல் போய், பல அவமானங்களை சந்தித்த பின்னரே அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதுவும் சின்ன சின்ன வேடங்களில்தான். அப்படி நடித்துதான் எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகராக மாற்றியது. அதன்பின் அவரின் வளர்ச்சியை யாராலும் தடுத்த நிறுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமையாகவும் எம்.ஜி.ஆர் இருந்தார். 50,60 களில் அவரின் படங்கள் மகத்தான வெற்றியை பெற்று வசூலை வாரி குவித்தது.
இதையும் படிங்க: கடன் வாங்கியதால் ஜப்திக்கு போன வீடு!.. எம்.ஜி.ஆர் சந்தித்த சோதனை!.. எல்லாமே அந்த படத்துக்காக!…
முதலில் கிடைத்த வாய்ப்பு:
அதில் சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்தும் உதவினார். ஆனால், சினிமாவில் ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்கு முன் அவர் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார் என்பது பலருக்கும் தெரியாது. சதிலீலாவதி என்கிற படத்தில் அவருக்கு இன்ஸ்பெக்டர் வேடம் கிடைத்தது. அதுதான் அவர் நடித்த முதல் திரைப்பபடம் என பரவலாக சொல்லப்படுகிறது. அப்போது இன்ஸ்பெக்டர் என்றால் சைக்கிளில் வருவார்கள்.
ஆனால், எம்.ஜி.ஆரிடம் சைக்கிள் இல்லை. சைக்கிள் இல்லாமல் போனால் வாய்ப்பு இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. என்ன செய்வது என அவர் யோசித்துகொண்டே ஸ்டுடியோவுக்கு நடந்து செல்லும்போது ஸ்டுடியோவுக்கு அருகில் இருந்த தெருவில் ஒரு சைக்கிளை பார்த்தார். அருகே யாருமில்லை. மேலும், அது பூட்டப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உடனே அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ஸ்டுடியோவுக்கு எம்.ஜி.ஆர் சென்றுவிட்டார்.
சைக்கிளுக்கு சொந்தக்காரர் சைக்கிளை தேடி ஸ்டுடியோவுக்கே வந்துவிட்டார். அப்போது எம்.ஜி.ஆர் அந்த சைக்கிளை ஓட்டி வருவது போல் காட்சியை எடுத்து கொண்டிருந்தனர், இதைப்பார்த்த அவர் ‘என் சைக்கிளை யார் எடுத்து வந்தது?’ என கத்த துவங்கிவிட்டார். உடனே அவரிடம் சென்ற எம்.ஜி.ஆர் ‘நான்தான் அந்த சைக்கிளை எடுத்து வந்தேன். பூட்டப்படாமல் இருந்தது. அங்கில் யாருமில்லை. எனக்கும் தேவையாக இருந்தது. இங்கே இருந்தால் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று நினைத்தே எடுத்து வந்தேன்’ என எம்.ஜி.ஆர் சொல்ல, கோபம் தணிந்த அந்த நபர் படப்பிடிப்பு முடிந்ததும் சைக்கிளை வாங்கி சென்றாராம்.
அந்த சைக்கிளுக்கு சொந்தக்காரர் யார் என்பதுதான் ஹைலைட். பின்னாளில் பராசக்தி, ரத்தக்கண்ணீர் போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணன் – பஞ்சு இரட்டை இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாலு பேருக்கு வைக்கப்பட்ட டெஸ்ட்!.. அசால்ட் பண்ணி வாய்ப்பு வாங்கிய எம்.ஜி.ஆர்..